பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகமும் புறமும்

239


 தித்தானே விளக்க முடியும்? அந்த முறையில் இந்த அகப் பொருள் நாடகங்களுள் வரும் பாத்திரங்களுள், கவிஞர் தம்மையே தலைவனாகவும், தலைவியாகவும், தோழியாகவும், செவிலியாகவும் கற்பனை செய்துகொண்டு பாடிய பாடல்கள் பலப்பல. அப்படித் தாமே அவையானல்தான், கவிஞர் கவி பாட முடியும். அந்த வகையில் அகப்பொருட்கு உரியார் சிலர் பேசப்படுகின்றனர். அவருள் முக்கியமானவர் தலைவன், தலைவி, தோழி, பாங்கன், செவிலி, நற்றாய் என்பவர். அவர்கள் வாயிலாகத்தான் தமிழில் உள்ள பல அகத்துறைப் பாடல்கள் தோன்றி வாழ்கின்றன. தொல்காப்பியத்தில் அவர்களைப் பற்றிய இலக்கணங்களையும் அவர்கள் பேசும் இடங்களையும், பிற இயல்புகளையும் ஆசிரியர் நன்கு விளக்கியுள்ளார்.

தலைவன் தலைவியரைப் பயில்வோர் முன்னிறுத்தி, அவர்தம் பண்பின் வழி உலகில் வாழ விரும்பும் மக்கள் மேற்கொள்ள வேண்டிய பண்பாடு, வாழ்க்கை முறை, பிற செயல். முதலியவற்றைக் காட்டுவர் புலவர்.

'பெருமையும் உர்னும் ஆடுஉ மேன’

(களவியல்: 7)

என்றும்,

'அச்சமும் நானும் மடனுமுந் துறுதல்
நிச்சமும் பெண்பாற் குரிய என்ப'

(களவு: 8)

என்றும், தலைவனுக்கும் தலைவிக்கும் சிறந்திருக்க வேண்டிய குணங்களைத் தொல்காப்பியர் காட்டுகின்றார். அவரவர்களுக்கு அமைய வேண்டிய குண நலன்களையும், பலபடியாகப் பொருளியலிலும் களவு கற்பென்னும் இயல்களிலும், பிறவிடங்களிலும் விளக்கிக் காட்டுகின்றார் தொல்காப்பியர். ஒவ்வொருவருக்கும் உரிய மரபையும், அம்மரபினை வழுவாமற் காக்க வேண்டிய கடமையையும் அவர் விளக்கத் தவறவில்லை. அவர் யார் யாரிடம் எவ்வெவ்வாறு பேசவேண்டும் என்பதையும் வரையறுத்து விடுகின்றார். தொல்காப்பியம் ஓர் இலக்கண நூலானமையின், ஒவ்வொன்றின் இலக்கணத்தையும் ஒப்ப நாடி ஆராய்ந்து, அவற்றின் நிலை கெடாதபடி காட்டிச் செல்