பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகமும் புறமும்

243


 வரையறுத்து ஆக்கப்பட்டன என்கின்றார். இந்தச் சட்ங்குகள் எப்படிப்பட்டன என்பதை அகநானூறு முதலிய பாடல்கள் நமக்கு விளக்குகின்றன. அவற்றின் விளக்கங்களைப் பின்னர்ப் பார்ப்போம்.

இவ்வாறு காதன் மனையாளோடு கலந்து வாழ்கின்ற தலைவன் கடமை மறந்தவனோ என எண்ண வேண்டா. களவுக் காலத்திலும், கற்புக் காலத்திலும் தலைவன் தலைவியை இடையிடை விட்டுக் கடமைவழிக் கருத்திருத்துகின்றான். அப்படிப் பிரியும் காலத்துத் தலைவி ஆற்றியிருக்க ஒண்ணாது அலமருவாள். அக்காலத்திலெல்லாம் தோழி அவள் அருகி லிருந்து ஆறுதல் கூறுவாள். தலைவன் அவ்வாறு தன் காதல் வாழ்விலேயே மூழ்கிக் கடமையை மறந்து சுய நலத்தில் வாழ்வானாயின் அவன் பொருவில் தலைவனாக் எப்படி இருக்க முடியும்? கட்டிப் பிணித்த காதல் வாழ்வு விட்டு நீக்க முடியாத ஒன்றேனும், அதனால் தன் கடமையை மறந்து கெடுபவன், நாட்டையும் மற்றவரையுங்கூடக் கேட்டுக்கு வழி காட்டியாக நின்று அழைத்துச் செல்பவனாவான். சிந்தாமணியின் கதாநாயகனகிய சீவகனின் தந்தை சச்சந்தன் இவ்வாறு காதல் வாழ்வில் தன்னை மறந்து, அரசாளும் கடமையைக் கைவிட்டு, க்யநலத்தில் வாழ்ந்ததாலேதான் நாடு, கவி னழிந்து கட்டியங்காரன் வசமாயிற்று. அந்த நிலையில் எல்லாம் பொருவிறந்த தலைவன் இருக்கலாகாது- என்று தொல்காப்பியரும் பிறரும் சொல்லியுள்ளனர். தலைவன் தலைவியருடைய பண்புகளையெல்லாம் பின் மெய்ப்பாட்டியலில் தொகுத்துக் கூறும் தொல்காப்பியர்,

"பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு
உருவு நிறுத்த காம வாயில்
நிறையே அருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையை;

(மெய்ப். 25)

என்று கூறுகின்றார். இத்தகைய பண்பு நலம் வாய்ந்த தலைவன் தன் கடமையைத் தவற விடுவானோ? மேலும், தலைவனுடைய நெஞ்சு தடுமாறும் நிலையில் அவன் எப்படி நடந்துகொள்ள