பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகமும் புறமும்

247



பொருளும் அவற்றது நிலையின்மையுமாகிய ஆறனுள்ளும் நிலையின்மை மூன்றற்கும் உரித்தாய் எல்லாத் திணைகட்கும் ஒத்த மரபிற்றாகலானும், 'பின்னர் நான்கும் பெருந்திணை பெறும்,' (105) என்ற நான்கும் சான்றோர் இகழ்ந்தாற்போல அறம் முதலியவற்றது நிலையின்மை உணர்ந்து அவற்றை அவர் இகழ்தலானும், ஏறிய மடற்றிறம்' (51), முதலிய நான்கும் தீய காமமாயினவாறு போல உலகியல் நோக்கி நிலையாமையும் நற்பொருளாகலானும், உரிப்பொருள் இடை மயங்கி வருதலின்றித் தனக்கு நிலமில்லாத பெருந்திணைபோல அறம் பொருள் இன்பம் பற்றி யன்றி வேறு நிலையாமையென்பதோர் பொருளின்றாதல் ஒப்புமையானும், பெருந்திணைக்குக் காஞ்சி புறயிைற்று.

"ஒரு தலைவன் பரவலும் புகழ்ச்சியும் வேண்ட, ஒரு புலவன் வீடுபேறு முதலிய பரிசில் வேண்டலின், அவை தம்மின் வேருகித் ஒரு தலைக் காமமாகிய கைக்கிளையோடு ஒத்தலின், பாடாண் திணை கைக்கிளைப் புறனாயிற்று.'

இவ்வாறு அகப்பொருளுக்குரிய ஏழு திணைகளையும் புறப்பொருளுக்கு உரிய ஏழு திணைகளையும் பொருத்திக் காணும் போது பலப்பல வாழ்க்கை உண்மைகள் நமக்குப் புலனாகின்றன. சிலர் தமிழ் இலக்கணத்தே அகப்பொருளுக்கு வகுத்த முதல் கரு உரி முதலியவற்றையும் அவற்றின் கூறுபாடுகளையும் புறப்பொருளுக்கு வகுக்காமையின், அவர்கள் புறத்தை அத்துணையாகப் போற்றவில்லை என்று குறைப்பட்டுக் கொள்வர். என்றாலும், நச்சினார்க்கினியரின் இந்த உரை விளக்கங்களை ஊன்றிப் பார்ப்பாராயின், அவ்வாறு கூறாமைக்குக் காரணம் புலப்படும். அகத்துப் புறன் என்று கூறிய அமைதியாலேயே அகத்திற்கு உரிய அத்தனையும் புறத்திணைளுக்கும் பொதுவாகத்தானே கொள்ளவேண்டும்? அவ்வாறு கொள்ளும் நெறியும், கொள்ளுவது எவ்வெவ்வாறு பொருந்தியுள்ளதென்ற தன்மையும், அவை பின் விரவும் வழியும், நச்சினார்க்கினியர் நன்கு எடுத்துக் காட்டியுள்ளார். இவ்வாறு உணர்தலைத்தான் போலும் தொல்காப்பியர்,