பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

2. கவிதையும் கவிஞனும்


விதை என்பதற்குப் பொருள் என்ன? அது பாட்டா, உரைநடையா, இரண்டும் கலந்ததா? அது நீண்ட அளவினதா, சில அடிகளால் ஆகியதா? யாப்பிலக்கணத்துக்குக் கட்டுப்பட்டதா, அன்றிக் கங்குகரையற்ற வெள்ளப் பெருக்கா? கவிதை எதைப் பற்றிப் பாடுவது? மனிதனையா? மற்றவைகளையா? விண்ணையா? மண்ணையா?. கவிதைக்கு எல்லைகள் எவை? இவ்வாறு பல்வேறுவகை வினாக்கள் உள்ளவாறு கவிதையைப்பற்றி அறிய நினைப்பவர்தம் உள்ளத்து எழுதல் இயல்பு. சாதாரணமாகக் கவிதை என்றால், ஏதோ பாட்டு என்ற அளவிலேதான் பலரும் பொருள் கொண்டிருப்பர். ஆனால், பாட்டு மட்டும் கவிதையாய்விடாது என்பதை முன்னமே கண்டோம். பொருள் நலம் சார்ந்தது கவிதை என்ருேம். அப்படியானல், பொருள்நலப் பண்புகளும், பிற இயல்புகள் அனைத்தும் கலந்த உரைநடையுங்கூடக் கவிதையாகிவிட முடியுமா?’ என்ற வினா உடனே எழுதல் இயல்பு. "ஆம்" என்று அதற்குத் தட்டாமல் விடையிறுக்கலாம். சிலப்பதிகாரத்தில் வரும் உரைநடைக் கோவைகளும், இறையனர் அகப்பொருளுக்கு வரைந்த உரையும் பாட்டுக்கள் அல்லவாயினும், அவற்றைக் கவியென்றே கொள்ளல் வேண்டும். கவி என்பது, ஆசிரியனது ஆழ்ந்த உள்ளத்து உயர்ந்துள்ள எண்ணங்களின் வெளிப்படையான உருவமேயாகும். அவ்வுள்ளம், உள்ளுவதெல்லாம் உயர்வுள்க.என்ற வள்ளுவர் வாக்குப்படி, உயர்ந்தவற்றையே உள்ளின், அவ்வுள்ளம் பெற்றெடுக்கும்,ஒவ்வொரு சொல்லும்கவிதான். சொல்லும், அடியும், பாட்டும், உரைநடையும் கவிதைகளாகக.வா.—2