பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகமும் புறமும்

251



கொடி நிலை கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதனை மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே.

(புறம். 27)

என்கின்றார்.இதற்கு உரை தந்த நச்கினார்க்கினியர் கீழ்த் திசைக்கண்ணே நிலைபெற்றுத் தோன்றும் வெஞ்சுடர் மண்டிலம், ஒரு பற்றுக்கோடுமின்றி அருவாகித் தானே நிற்கும் தத்துவம் கடந்த பொருள், தண்கதிர் மண்டிலம் என்று சொல்லப்பட்ட குற்றந் தீர்ந்த சிறப்பினையுடைய முற் கூறப்பட்ட மூன்று தெய்வமும், முற்கூறிய அமரரோடே கருதுமாற்றால் தோன்றும்,' என்கின்றார். இதனானே கடவுள் வாழ்த்தும் அவ்விறைவனைப் போற்றும் முறையும் நாட்டின் புற ஒழுக்கமாக அமைந்துள்ளனவென அறிகின்றோம். சூரிய சந்திரராகிய கொடிநிலையும் வள்ளியும் போற்றப்படுகின்றன. அவற்றின் மேலாகக் கட்டற்ற அருவாகி அப்பாலுக்கப்பாலாய் நிற்கும் ஆண்டவன் தன்மையையும் தொல்காப்பியர் சுட்டிக் காட்டுகின்றார். இக்காலத்துப் பரந்துள்ள பல்வேறு வகைப்பட்ட உருவ வழிபாடுகளும் பிறவும் இலவேனும், இறைவன் மக்கள் மன அறிவைக் கடந்து அமைந்துள்ள ஒரு பொருளானவன் என்பதை அன்றைய தமிழர்கள் உணர்திருந்தார்கள் என்பதற்கு இது சிறந்த சான்றாகுமன்றோ!

மற்றும் கடவுள் உணர்வோடு உலகம் நிலையாது யென்ற துறவு உணர்வும் இங்கு நிலைபெற்றிருந்ததாக அறிகின்றோம். காஞ்சித் திணையை விளக்க வந்த தொல்காப்பியர்,

'பாங்கருஞ் சிறப்பின் பல்லாற் றானும்
கில்லா உலகம் புல்லிய நெறித்தே'

(புறம். 18)

என்று விளக்குகின்றார். பின்பு அக்காஞ்சித் திணையின் துறைகளை விளக்கும் காலத்து, அந்த நிலையாமையை எந்த வழியில் காட்டுகின்றார் என்பது விளங்குகின்றது. முன் பல திணைகளில் பல்வேறு வகைப்பட்ட போர்நிலைகளைக் கண்டவர், கருத்தழிந்து, உலக நிலையாமை உணர்ந்து, போரை நிறுத்த வேண்டுமென்பதே. இந்நிலையாமை விளக் கத்தின் குறிக்கோளய் இருக்கின்றது. 'உலகம் பொய்! பிற அனைத்தும் பொய்,' என்று நில்லா நிலைமையை எடுத்து விளக்காது, ஆசிரியர் முன்னர்க் காட்டிய போர்களைப் பற்றி யெல்லாம்