பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264

கவிதையும் வாழ்க்கையும்


 திறனில்லா ஒரு சிலரைச் சட்டம் சிறை செய்து விடலாம். ஆனால், நாட்டு மூலை முடுக்குகளிலெல்லாம் அக் கலை வீறு, கொண்டு வளர்வதை யாரால் தடைசெய்ய முடியும்? சென்ற தேர்தலின்போது, சட்டமன்ற உறுப்பினர் பலர், 'நாட்டில் திரும்பவும் மதுவைக் கொண்டுவரப் பாடு படுகின்றோம்: என்று பகிரங்கமாகக் கூறியே மக்களிடம் ஒட்டுப் பெற்றுள் ளார்கள் என்பதை நாடு அறியும். ஆகவே, மக்கள் வாழ்வோடு பிணைந்த ஒன்று கவிதையாயினும், அன்றிக் கள்ளாயினும், அன்றி வேறு எதுவாயினும், அவற்றை மக்கள் வாழ்விலிருந்து, பிரிக்க முடியாது என்பது முற்றிலும் உண்மை. இது நிற்க.

ஒருவேளை ஆணையின் பலத்தாலும், அதிகார முறையாலும், பிரசார வகையாலும் ஒருவாறு மக்கள் உள்ளத்தை மறைக்கும் வகையில், சிலவற்றை-மக்கள் வாழ்வில் பின்னியவற்றை-மறைத்துவிட்டாலும், அவை அழியாது நீறுபூத்த நெருப்புப்போல உள்ளே அடங்கிக்கிடந்து, வாய்ப்பு நேரும் காலத்தில் மறுபடியும் தலைதூக்கியே நிற்கும். அந்தக் கால எல்லையைக் கணக்கிட முடியாது. ஆயிரம் ஆண்டுகளும் ஆகலாம்:அன்றி அடுத்த ஆண்டிலேயும் வரலாம். அதற்கு மக்கள் மட்டுமன்றி மாநிலமாளும் சட்டசபைகளும் துணை புரியலாம். அவ்வாறு வாழ்வோடு பின்னியவை எவையும் மாயாது மறைந்து, காலம் வரும்போது தலைதுாக்கும் என்பதற்கு, இக் காலத்தில் நாம் கொண்டாடும் புத்த ஜயந்தி விழாவே போதிய சான்றாகும்.

புத்தரின் வாழ்வு நெறி மக்கள் வாழ்க்கைக்குப்பொருந்திய, ஒன்றாகும். ஏன்? ஒவ்வொரு சமயத்தின் அடிப்படையுமே வாழ்வோடு பொருந்தியதுதான். அதன் விரிவையெல்லாம் பின்னர்க் காண்போம். இன்று சமயங்களிலெல்லாம் மாசு படிந்துள்ளது. சமயத்தினிடத்தில் பிறப்பால் வேற்றுமையும் பிற வேற்றுமைகளும் வளர்ந்து கொழுந்து விட்டெரிவதைக் காண்கின்றாம். கடவுள் பெயரால் பல கொடுமைகள் நடை பெறுகின்றன. கடவுள் பெயரால் பல சாதிப் போராட்டங்களும், பிற போராட்டங்களும் நடைபெறுகின்றன. இவற்றை