பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்வொடு பிணைந்த கவிதை

265



யெல்லாம் மக்களோடு பிணைந்தவை என்று கூற முடியுமா? மக்கள் வாழ்வு ஒன்றிய வாழ்வு: எல்லாரும் இன்புற்றிருக்க வேண்டும் என்ற அடிப்படையே அவர்கள் வாழ்வு. எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றிலும் தவறக்கூடாது என்பதே அவ்வாழ்வின் அடிப்படை. அதைக் கொண்டுதான் புத்த சமயம் ஆக்கப்பெற்றது. சுயநல வாழ்வு நீங்கி, "யாதும் ஊரே, யாவரும் கேளிர்,' என்ற அடிப்படையிலே, மக்களையும் பிற உயிர்களையும் ஒத்து நோக்கித் தீங்கிழையாத் தெய்வ நெறியிலே அமைந்தது மக்கள் வாழ்க்கை. மறு உலகைப்பற்றிய கவலையே கொள்ளாது, உலகில் வாழும் அனைத்தையும் அனைத்துத் தழுவிச் செல்வதே இம்மையில் மறுமை நல்கும் ஏற்றம் வாய்ந்த செயல் என்பதை வாழ்ந்து காட்டுவதே வாழ்க்ன்க. இவ் வாழ்க்கையை வழங்குவதுதான் புத்த நெறி. எனினும், இந்த் நெறி இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாகப் பிற சமயத்தாராலும், கொலையும் புலையும் கொண்டொழுகும் மாற்றாராலும், அவர்தம் ஆளும் திறத்தாலும் மறைக்கப்பட்டிருந்தது. புத்தர் பிறந்த நாட்டில் அந்தச் சமயம் செத்தது என்றே அனைவரும் எண்ணியிருந்தனர். ஆனால், இன்றைய நாட்டு நிலை ள்தைக் காட்டுகின்றது? அது அழிந்ததையா? இல்லை. அது நீறுபூத்த நெருப்பாயிருந்தது: அது மக்கள் வாழ்வோடு பின்னி நின்ற காரணத்தால், மறைந்தொழியாது, நீறுபூத்த் நெருப்பாகி, காலம் வந்ததும் களிநடம் புரிகின்றது. இன்றைய அரசாங்கக் கொடியில் அந்தச் சமயத்தின் அறவாழி; அச்சமய பீடமாகிய சாஞ்சியில் சின்னம்: அவர் பிறந்த நாளுக்கு என்றுமில்லாத கொண்டாட்டம்: எந்த வேறுபாடுமின்றி எல்லாக் கட்சித் தலைவர்களும் ஒரே மேடையில் கலந்து பேசும் உணர்வு: அரசாங்க விடுமுறை இத்தனைக்கும் இடையிலே இந்திய நாட்டிலே இதுவரை செத்ததோ என்று கருதிய ஒரு சமயத்துக்கு, வாழும் எந்தச் சமயத்துக்கும் இல்லாத ஒரு பெருஞ்சிறப்பு எதனால் ஏற்பட்டது? அச்சமயம் மக்கள் வாழ்வோடு பின்னி, மக்கள் வாழ்வு வேறு. தான் வேறு என்று பிரிக்க முடியாத நிலையில் ஆக்கப்பட்டிருப்பதனாலேயாம்.


க.வா-17