பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

266

கவிதையும் வாழ்க்கையும்



கள்ளுக்கும் சமயத்துக்கும் பொருந்திய உண்மை கவிதைக்குப் பொருந்தாது போகுமா? எண்ணிப் பார்க்க வேண்டும். கவிதைகள் மக்கள் வாழ்வோடு பின்னியவையாகப் பிணைந்து நிற்குமாயின், அவை என்றென்றும், மக்கள் மக்களாக வாழும் வரையில், வாழ்ந்துகொண்டேதான் இருக்கும். ஒரு கவிதைத் தொகுதியில் சிற்சில குறைகள் இல்லாமற் போகா. அதனாலேயே அக் கவிதை அனைத்தும் தவறு என்று தள்ளிவிட முடியுமா? நம் நாட்டுக் கவிதையாயினும், பிற நாட்டுக் கவிதையின் மொழிபெயர்ப்பாயினும், அது நம் நாட்டு மக்கள் வாழ்வோடு பிணைந்ததாயின், வாழவைப்போம்; நாம் வாழ வைக்காவிடினும், அவை தாமாகவே வாழும். அல்லாத இலக்கியங்களை எத்துணைதான் காக்க விரும்பினாலும், எதிர்ப் போர் ஒருவரும் இன்றியும் தாமே செத்து மடியும்.

முன் கண்ட கம்பராமாயணத்தையே நோக்குவோம். அது வடநாட்டுக் கதைதான்; நம் நாட்டுக்கு ஒவ்வாத சில பழக்க வழக்கங்கள் அதில் பயின்று வந்திருக்கவுங் கூடும். எனினும், அதைத் தமிழில் மொழி பெயர்த்தபொழுது கம்பர் என்ன் செய்துள்ளார் என்பதைக் காணல் வேண்டும். தமிழ்நாட்டு வாழ்க்கையில் கற்புத் தலைசிறந்தது. பெரும் பெயர்ப் பெண்டிரின் கற்புநலம் நாட்டில்-மக்கள் வாழ்வில்-நன்கு காக்கப் பட்டு வந்தது-வருகிறது-வரும். இந்தக் கற்பு நெறியின்படி தம் போக்கில் கதையைக் கம்பர் மாற்றி அமைத்துக் கொண்டார். மாற்றான் மனைவியைத் தீண்டுவதும் குற்றம் என்பது தமிழர் கற்பு நெறி. தம் வடநாட்டுக் காவியத்தில் கம்பர் அந்த உயர்ந்த வாழ்வின் குறிக்கோளை அப்படியே பொறித்து முத்திரையிட்டு விட்டார். வால்மீகியாரின் சீதை அல்லது உண்மைச் சீதை எப்படியிருந்தாளோ, அவளைப்பற்றி நாம் கவலைப்படவேண்டுவதில்லை. ஆனால், கம்பர் அவளை ஒரு தமிழ்ப் பெண்ணாக மாற்றி விட்டபின் அது தமிழர் வாழ்வோடு பிணைந்தில்லாது எங்கே போகும்? இராவணன் சீதையைக் கொண்டு செல்வதும், அவன் நாட்டில் வைத்திருப்பதும், பின்பு, அனுமன் சென்று காணும் போதும் அவள் இலக்குவன்