பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

280

கவிதையும் வாழ்க்கையும்


தத்தில் உள்ளவர் வருத்தம் நீங்கி வாழ, அதன்பின் வையகம் வாழ. எனவே, செல்வம் மிக்க ஒருவன் வறியவன் ஒருவனைக் கண்டு, அருகழைத்து, ஆறுதல் கூறி, அவன் வருத்தம் நீங்க வழிகாட்டி, வாழ்க்கை நல்லதாக அமையும் வகைகளை விளக்குவதே ஆற்றுப் படையாகும். இந்த வாழ்க்கை, கவிதையில் பின்னிக் கிடக்கவேண்டும் என்பதைத்தானே மேலே கண்டோம்! ‘நோயாளிக்கு வைத்தியன் வேண்டும்’. என்ற இயேசுவின் மொழிக்கேற்ப, வாடுபவனுக்கு வாட்டம் தீர்க்க வழி காட்டுவது அன்றி வேறு வாழ்க்கை உண்டோ? இந்த ஆற்றுப்படைகள் அத்தகைய வழியைத்தான் காட்டுகின்றன. அவ்வாறு வாழ வழி காட்டும் ஒரே காரணத்தாலேதான், இக் கவிதைகளும் சிரஞ்சீவிகளாய் வாழ்கின்றன. வாழட்டும் அவ்வழியின் நாமும் காண்போம். - மக்கள் எப்படி வாழ வேண்டுமென்பதை நமக்கு விளக்க விரும்பினர் நக்கீரர். ‘கடவுளே, வணங்குகின்றோம்,’ என்பவ ரெல்லாம் நல்லவரோ பெரியவரோ ஆகமாட்டார். கடவுளைப் போற்றுதற்கு நல்ல உள்ளமும் உரமும் தேவை. தீதற்ற சினம் நீங்கிய சிந்தையராய் காமமும் கொடுமையும் அற்ற தன்மையராய் உள்ளவரே உண்மையில் கடவுளை வழிபடுதற்கு உரியவர். கடவுள் நெறியும் அத்தகையதுதானே! வெற்று ஆரவாரமும் ஆடம்பரங்களும் அன்பு நெறிக்கு அப்பாற்பட்டவை. அவற்றை நீக்கி நல்ல உள்ளத்தால் வழி படுபவரைக் காட்டி, அவர் மூலம் உலகில் மக்கள் ஒருவரை ஒருவர் தழுவி வாழ வேண்டுமாயின், இவ்வாறு இருக்க வேண்டும் எனக் குறிக்கின்றார். பழநி மலையில் முருகன் முன்நின்று வழிபடும் அடியவரை முன்னிறுத்தி, அவர்வழி மக்கள் உள்ளத்தையே காட்டுகின்றார் புலவர் நக்கீரர்.

"இகலொடு
செற்றம் நீக்கிய மனத்தினர்; யாவது
கற்றோர் அறியா அறிவினர்; கற்றோர்க்குத்
தாம்வரம் பாகிய தலைமையர்: காமமொடு