பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

284

கவிதையும் வாழ்க்கையும்


களையும் கூறுகின்றனர்; பரிசு பெற்ற புலவனது முன்னைய நிலையினையும் பின்னைய நிலையினையும் காட்டி அக்காலத்தில் அரசரையும் வள்ளல்களையும் சார்ந்தார் பெறும் வரிசைகளைக் காட்டுகின்றனர். புலவர் தம் வாட்டும் வறுமையில் கற்பனை இல்லாது, வாழ்வில் உள்ளதை உள்ளபடியே காட்டும் திறன் கண்டு மகிழத்தக்கது. அதனுடன் அவர்கள் செல்லும் வழியின் சிறப்பையும் கொடுமையையும் கூறி, பின்னர் வள்ளல் வழங்கும் கொடைநலத்தின் மூலம், அக்காலத்து மன்னரும் செல்வரும் பெற்றது கொண்டு சுற்றத்தாரையும் மற்றவரையும் உண்பிக்கும் வாழ்க்கை முறையினையும் எடுத்துக் காட்டுகின்றனர். ஒவ்வொரு நாட்டிலும் அரசர்தம் வாழ்வைக் காட்டுமுன் ஐவகை நிலமக்கள் வாழ்வைக் காட்டுவதனாலேயே இவை வாழ்விலக்கியமாய் விளங்குகின்றன எனலாம். சிலர்தம் செல்வ வாழ்வை மட்டும் காட்டாது, நாட்டில் சேர்ந்துள்ள வறுமை வாழ்வையும் காட்டுவது வாழ்விலக்கியமாகாதோ!

வறுமையால் வாடும் பொருநன் வாழ்வினை, அவன் அணிந்திருந்த ஆடையை விளக்குமுகத்தான்,

‘ஈரும் பேனும் இருந்திறை கூடி
வேரொடு நனைந்து வேற்றிழை நுழைந்த

துன்னற் சிதாஅர்’
(பொருநர். 19-81)

என்று கூறிப் புலவர் ஏழ்மை நிலையைக் காட்டுகின்றார். சிறுபாணன் வறுமை நிலையினை,

’தறவாக் கண்ண சாய்செவிக் குருளை
கறவாப் பான்முலை கவர்தல் நோனாது
புனிற்றுநாய் குரைக்கும் புல்லென் அட்டில்
காழ்சோர் முதுசுவர்க் கணச்சிதல் அரித்த
பூழி பூத்த புழற்கா ளாம்பி
ஒல்குபசி உழந்த ஒடுங்குநுண் மருங்குல்
வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த
குப்பை வேளை உப்பிலி வெந்ததை
நடவோர் காட்சி நாணிக் கடையடைத்து