பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

288

கவிதையும் வாழ்க்கையும்


 வாய்ந்த செல்வர், மக்கள் வாழ்வில் வேறுபாடு காணாராய், புறத்தோற்றத்தால் முகம் கோனாராய், எதிரேற்று வந்தவர் யாவராயினும் மகிழ்ந்து சிறப்புச் செய்யவேண்டும் என்பதை ஒவ்வொரு கவிதையும் எடுத்துக் காட்டுகிறது. அதனுடன் ஏற்ற அவர்களை, தம்மைப் போலவே செல்வரெனும்படியாக்கித் தேரும், களிறும், பிற நல்ல உணவுகளும் தந்து, பொன்னாடை போர்த்தி, பல நாள் தம்முடன் அவர்கள் வைத்திருப்பார்கள் என்பதையும் காட்டுகிறது. பின்பு அவர்கள் செல்லவேண்டும் என்ற குறிப்பை உணர்த்தினும் முதலில் இணங்காராய், பின் வேறு வழி இன்றி இசைந்து, அவர்க்கு வேண்டுவன கொடுத்து, தேரேற்றிச் 'சென்று வருக!' என்று விடையும் தந்து, நின்ற இடத்தோடு திரும்பாது, அவருடன் 'காலின் ஏழடி' பின் சென்று பிரியும் பெருமிதமற்ற பெருஞ்செல்வ வாழ்வை இக் கவிதைகள் நம் கண்முன் காட்டுகின்றன.[1]இவை காட்டும் வாழ்க்கை நாட்டில் இன்று எங்கே?

இவ்வாறு அரசரும் வள்ளல்களும் ஒருசேர மற்றவர் வாழ்வே தம் வாழ்வாக வாழ்ந்த காரணத்தினாலேதான் போலும் எத்தகைய வறுமையில் புலவர்கள் வாடினாலும் அவர்கள் அதுபற்றிக் கவலையற்று இருந்தார்கள்! இவ்வாறு ஐந்து ஆற்றுப்படைகளிலும் நாட்டு இயற்கைப் பொருள்களின் அமைப்பையும் கூறுபாட்டையும், அவற்றில் வாழும் மக்கள் வாழ்க்கையையும் அவர்தம் விருந்தோம்பும் பண்பாடு முதலியவற்றையும், செல்வர் வறியரென்ற வேறுபாடிருந்தும், அது தெரியாதவாறு செல்வர் சேர்ந்தோரை ஆதரித்த சிறப்பும், பிற பண்புகளும் கலந்த அந்தநாள் வாழ்க்கை அப்படியே விளக்கப்படுகின்றதன்றோ! இவை வாழ்வோடு பிணைந்த நல்ல கவிதைகளல்லவோ! இனிப் பிற பாடல்களைக் காண்போம்.

நெடுநல்வாடையை ஒத்ததே முல்லைப் பாட்டு. அங்கே வாடைக்காலம் இடம் பெறுவது போன்று. இங்கு மாரிக்


  1. 1. பொருநர். 155-177; பெரும்பாண், 478-490 மலைபடுகடாம், 569-581