பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

292

கவிதையும் வாழ்க்கையும்



எனத் தலைவன் தேற்றிச் செல்லும் காட்சியும் பிற மலர்ச் சோலைக் காட்சிகளும் இப்பாடலுக்கு ஏற்றந் தந்து, தமிழர் வாழ்வை நன்கு விளக்குகின்றன. இப்புலவர் தம் குறிஞ்சிப் பண்பு கலந்த பல பாடல்களைப் பின்னர்க் காண இருக்கின்றோமாதலின், இந்த அளவோடு இதை நிறுத்தி மேலே செல்வோம்.

பத்துப்பாட்டில் மேலே பார்த்தன போக இருக்கின்ற இரண்டு தமிழ்நாட்டு நகர வாழ்க்கையை நமக்கு எடுத்துக் காட்டுவன. மதுரைக் காஞ்சி பாண்டியர் தலைநகராகிய மதுரையின் வாழ்வையும், பட்டினப்பாலை மறைந்த தலைநகராகிய காவிரிப்பூம்பட்டினத்தின் வாழ்வையும் காட்டுகின்றன. இன்றும் நாம் வாழும் நகர வாழ்க்கையில் காணும் பலபல முறைகளும் வழிகளும் துறைகளும் அன்றும் இருந்தன. இரண்டுள் ஒன்று உள்நாட்டுத் தலைநகர்; மற்றொன்று, கடற்கரைப்பட்டினம். 'பட்டினப்பாலை' என்பது புகார் நகரின் பெருமையையும் அதில் வாழ்ந்த மக்கள் நிலையையும் விளக்குவது. அவ்விளக்கு முறைக்கு ஆசிரியர் உருத்திரங் கண்ணனர் ஆய்ந்த பாத் திறத்தின் இயல்பு அறியத்தக்கது. அகப்பொருள் துறையில், தலைவன் தலைவியை விட்டுப் பிரிய ஆற்றாத நிலையில் அமைந்த பாடல் இது. 'முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும்' தான் தம் தலைவியை விட்டுப்பிரியாத நிலையில் தலைவன் கூறுவதாக அமைகின்றது இப்பாடல். தான் செல்லும் வினவழி இத்தகைய பட்டினமே பெற்றாலும் தான் தலைவியைப் பிரிதல் இயலாது என்று கூறி, அப்பட்டினம் எத்தகையது என்பதை விளக்கும் வகையிலேதான் புகார் விளக்கப்படுகின்றது. தமிழர்தம் கடற்கரைப்பட்டின வாழ்க்கையை விளக்க இதனினும் வேறு பாடல் தமிழ் இலக்கியத்தில் காண்டல் அரிது.

புகார் நகரம் காவிரி கடலோடு கலக்குமிடத்து அமைந்துள்ளது. அது மருவூர்ப்பாக்கமெனவும் பட்டினப்பாக்கமெனவும் இரு பிரிவாய் உள்ளது. சோனட்டின் தலைநகர் அது. அந்நாட்டு மக்கள் பகையறியா அமைதி வாழ்க்கையில் வாழ்பவர்கள். அந்நகரின் பலப்பல பகுதிகளில் பலப்பல