பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

310

கவிதையும் வாழ்க்கையும்


களவு வாழ்விலே உள்ளம் பறிகொடுத்த காதலர் வாழ்வு, எத்தனை நெகிழ்ச்சிக்கும் முன் யோசனைக்கும் இடம் கொடுத்துள்ளது என்பதைக் காணின், மகிழ்ச்சி பிறக்கிறது. தெருவில் சிறு பெண்ணுய் விளையாடிக் கொண்டிருக்கையில் அவளொடு வம்புக்கு வந்தான் அவன். பந்து கொண்டு ஒளித்துப் பூசல் விளைவிப்பான் அவன். அப்படியே நாள் பல சென்றன போலும்! எனினும், ஒருவர் உளத்தே மற்றவர் அந்த இளமையிலே இடம் பெற்றிருக்க வேண்டும். பின்பு ஒருநாள் பருவம் எய்திய தலைமகள் வீட்டிலிருக்க, அவன் முன் வாயிலிற் சென்று நீர் கேட்டான். உள்ளே வேலையாயிருந்த அன்னை, மகளை, ‘நீர் கொடுத்து வா’ என்றாள். அவளும் வந்தவன் யாரென அறியாள்; நீர் கொண்டு சென்றாள். அவனே, நீரைவிட்டு அவள் கையையே பற்றிக்கொண்டான். அவளும் அறியாது அலறி அன்னாய்! இவன் ஒருவன் செய்தது காண்! என்றாள். ஆனால், அதற்குள் அவள் உள்ளம் அவன் உள்ளத்தோடு பேசிற்று. முன்னை விளையாட்டெல்லாம் மீண்டும் நினைவிற்கு வந்தன. அதற்குள் அன்னை அஞ்சி அருகில் வந்தாள். அப் பெண் என்ன கூறியிருக்க வேண்டும்? அவன் கையைப் பிடித்த கொடுமையைத்தானே? அவள் அதைக் கூற மாட்டாள் என்று அவன் உள்ளம் உணர்ந்திருக்க வேண்டும். அதனாலே தான் தைரியமாக அங்கேயே நின்று கொண்டிருந்தான். அவள், உண்ணு நீர் விக்கினான்! என்ற பொய்யை உரைத்தாள்: அவனும் அவ்வாறே நடித்திருப்பான். அன்னை பழிவரும் என்றஞ்சி, அவன் மார்பைத் தடவிக் கொடுத்தாள். அவனே, அதே வேளையில் கடைக்கண்ணால் கொல்வான்போல நோக்கி நகைத்தான். இது கலித்தொகை 51—ஆம் பாட்டுக் கூறும் கதைதான். கதையாய் இருப்பினும், இதை வாழ்வில் காணமுடிகின்றது. அன்று மட்டுமன்றி, இன்றும் இதுபோன்ற காட்சி நடைபெறவில்லை என்று யாரால் கூற முடியும்?

களவுப் புணர்ச்சியிலே யாதொரு சான்றுமற்ற நிலையில் தலைவன் தலைவியைக் கூடுகின்றான். பிறகு பிரிந்து, விரைவில் வருவதாக வாக்கும் தந்து செல்கின்றான். எனினும், குறித்த