பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எட்டுத்தொகை

311


நாளில் வரவில்லை. ‘கள்ளம் செய்துவிட்டானோ!’ என்று தலைவியின் பிஞ்சு உள்ளம் பேதைமைப்படுகின்றது. தங்கள் களவுப் புணர்ச்சியை அறியக் காட்ட முடியாது. தங்கள் உள்ளப்பிணைப்பு ஒருவருக்கும் தெரியாது. ஏன்? கள்ளத்தன மாகப் புணர்ந்த மெய்யுறு புணர்ச்சியும் மற்றவர் அறியாததே. ஆயினும், அவன் தன்னைக் கைவிடமாட்டான் என்ற துணிபுடையவள் அவள். அக் களவுமணத்தில் கைதொட்ட அவனைக் கள்வன்' என்றே அன்பால் நினைக்கின்றான். அதே வேளையில் அவள் கணவனோடு களவுப் புணர்ச்சியில் கலந்த ஞான்று, அருகிலிருந்த அருவியில் ஒடும் ஆரல்மீனைப் பார்த்திருந்த குருகின் நினைவு வருகின்றது. ஆனால், அதுவும் தங்கள் செயலைக் காணவில்லை. எனினும், தலைவன் வருவான் என்ற உணர்வில் மகிழ்கின்றாள், இந்த உள்ள நெகிழ்ச்சியை எல்லாம்,


‘யாரு மில்லை: தானே கள்வன்:
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ?
தினத்தா ளன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே.’ (குறுங். 25)

என்று கபிலர் அழகுபடக் காட்டுகின்றார். இத்தகைய களவொழுக்கத்துக்குப் பின்னரே மேலே நாம் கற்பொழுக்கத்தில் கூறிய அவர்கள், திளைத்தாடிய இன்பநிலையெல்லாம் வாழ்வில் நடைபெறுகின்றன. தலைவனைத் தலைவி புல்லி விடாது பிணைத்துத் துயில் கின்ருள். அவராத்திரி, யாகாது அன்றிராப் பொழுதெல்லாம் "சிவராத்திரி என்னுமாறு கூடிய வாழ்வின் இன்பத்திலே, பலப்பல பேசிக்கொண்டே விடியலில் உறங்கிவிட்டார்கள் போலும்! ஆயினும், சிறிது நேரத்திற்கெல்லாம் கோழி குரல் காட்டத் தொடங்கிவிட்டது. அக்குரல் ஒலி, பாவம் தலைவியை வாட வைத்துவிட்டது! அவள் உள்ளம் 'துண்' என்றதாம். ஆம். கணவனது அன்புப் பிணைப்பை விட்டு நீங்க வேண்டு-