பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

312

கவிதையும் வாழ்க்கையும்


மன்றோ! அதை எண்ணி நைகின்றாள் தலைவி. இக்கருத்தை அழகாக,

"குக்கூ’ என்றது கோழி; அதனெதிர்
துட்கென் றன்றென் றூஉ நெஞ்சம்
தோள்தோய் காதலர்ப் பிரிக்கும்
வாள்போல் வைகறை வந்தன்றா லெனவே!"
(குறுங். 157)

என்று அந்நிலையை நன்முல்லையார் அழகாகக் காட்டுகின்றார், அவர், பெயர் நோக்கப் பெண்ணுதல் வேண்டும். அன்றேல் இவ்வாறு துண்ணென்ற நெஞ்சை வேறு யாரால் காட்ட இயலும்? இப்படி இரவிலும் பகலிலும் பிரியாராய் வாழ வேண்டுமென்பதே தமிழர் வாழ்வின் குறிக்கோள். அந்த வாழ்வின் பயனே மக்கட்பேறு.

'மங்கலம் என்ப மனமாட்சி, மற்றதன்
நன்கலன் நன்மக்கட் பேறு.’ (குறள். 60)

அன்றோ? அந்த மக்கட் சிறப்பையும் அகநானூறு அழகாகக் காட்டுகின்றது. இம்மை மறுமை இன்பங்கள் இரண்டையும் தர வல்லவன் மகனே, என்பது மக்கள் வாழ்வுணர்ச்சி. அதேைலதான், அனைவரும் மக்கட்பேற்றை விரும்புகின்றனர். அம் மக்களால் பெறும் இன்பத்தை உணர்ந்து மகிழ்கின்ருள் தலைவி. யாராலும் திருப்ப முடியாது. பரத்தை வீட்டில் இருக்கும் தலைவனைத் திருப்பித் தன் வீடு கொண்டுவந்த மகனை எண்ணி, அவனைப்பற்றித் தோழியிடம் கூறிப் பாராட்டுகின்றாள். அப் பாராட்டின் மூலம் உலக வாழ்விலேயே சிறுவர் என்றும் இன்றியமையாதவர் என்பதைச் செல்லூர் கோசிகன் கண்ணனார் திட்டமாகத் தெரிவிக்கின்றார். இதோ அவர் வாக்கு:


'இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
மறுமை உலகமும் மறுவின்று எய்துப
செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்