பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எட்டுத்தொகை

323


என்றொரு புலவர் உலகில் போர் நிலை பெற்ற ஒன்று எனக் காட்டுகின்றார். ஆயினும், அந்தப் போரிலேயும்,

‘எம்மம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின்என
அறத்தாறு நுவலும்' (புறம். 9)

போர் முறையும் உண்டு என்பதை மற்றொரு புலவர் காட்டுகின்றார். இவ்வாறு போரும் பிறவும் இன்பமும் துன்பமும் கலந்துள்ள உலகத்தில் மக்கள் ஆற்றவேண்டிய அறநெறி களைப் புலவர் சிலர் கவிதைவழி வற்புறுத்துகின்றனர்.

அறம் ஆற்றவேண்டும்; இதை மறுப்பார் யாருமில்லை. ஆனலும், அவ்வறம் எத்தகையதாய் அமையவேண்டும்? பண்ட மாற்றுப் போன்று அமையாது, மறுமை நோக்காது, அறமாற்றலே கடமை என்ற உணர்விலே அவ்வறம் அமையவேண்டும். இதையே உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், ஆய் என்னும் வள்ளல்மேல் ஏற்றி,

'இம்மைச் செய்தது மறுமைக் காம்எனும்
அறவிலை வணிகன் ஆஅய் அலன் பிறரும்
சான்றோர் சென்ற நெறியென
ஆங்குப் பட்டன் றவன்கை வண்மையே,
(புறம். 134)

எனக் காட்டுகின்றார். அவ்வறமாற்றும் நிலையினை உறையூர் முதுகண்ணன் சாத்தனர் சோழன் நலங்கிள்ளியை முன்னிறுத்திப் பொருந்துமாறு காட்டுகின்றார். யாதொரு வேறுபாடு மற்ற மக்கட் பிறவியில் பிறந்தவருள் புகழொடு வாழ்வார் சிலர் என்பதை,

‘வேற்றுமை யில்லா விழுத்திணைப் பிறந்து
வீற்றிருந் தோரை எண்ணுங் காலை
உரையும் பாட்டும் உடையோர் சிலரே;
மரையிலை போல மாய்ந்திசினோர் பலரே.’
(புறம். 27)

என்று காட்டி, மாய்தலும் பிறத்தலும் மாறுவதும் நிறைந்த இவ்வுலகத்தில்,