பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறள்

329


எத்தகைய வாழ்வில் வாழ விரும்பினலும், விரும்பும் அவரவருக்கு ஏற்ற அறநெறியை வடித்துக் கொடுத்துள்ளார் வள்ளுவர். இல்லற வாழ்வும் துறவற வாழ்வும் அறம் என்ற பகுதியில் நன்கு பேசப்படுகின்றன. அதனதன் திறத்தில் ஒவ்வொன்றும் சிறந்ததேயாயினும், ‘அறன் எனப்பட்டதே இவ்வாழ்க்கை,’ என்று இல்லறத்திற்கே வள்ளுவர் தனித்த ஏற்றம் கொடுத்துள்ளார். துறவறத்தை மேற்கொள்பவன் தூயவனாய் இருக்க வேண்டும் என்பதைப் பலபடியாக வற்புறுத்துகின்றார். பிறகு, பொருள் அதிகாரத்தில் உலகத்து இன்றியமையாத பொருளை, ‘பொருள் இலார்க்கு இவ்வுலகம் இல்லை,’ என்ற அடிப்படையில், பலப்பல வகையாக விளக்குகின்றார். பொருளை ஈட்டலும் போற்றலும் வகுத்தலும் நாட்டில் நேரிய வழியில் நடைபெறவேண்டுமாயின், அதற்கு நல்ல அரசும், அவ்வரசைச் சார்ந்த அங்கங்களும் அமைய வேண்டும் என்பதைச் சில அதிகாரங்களால் விளக்குகின்றார். மனிதன் தன் வாழ்க்கையில் மனிதத் தன்மையோடு வாழ வேண்டுமானல், இன்னின்ன அறத்தை மேற்கொள்ள வேண்டுமென்றும், இன்னின்னவற்றைத் தள்ள வேண்டுமென்றும் திட்டமாகக் குறித்துள்ளார். சிலவற்றை அவர் கூறும்போது பேசவேண்டிய நாகரிகப் பண்பாடும் நமக்கு விளங்காமற் போகாது. அமைச்சராய் உள்ளாரும் அரசரைச் சேர்ந்தொழுகு வாரும் இன்னின்ன வகையினராய் இருக்கவேண்டும் என்றும் அரசர் யார்யாரைச் சார்ந்தொழுகின் நாட்டு வாழ்க்கை நலமுறும் என்றும் காட்டுகின்றார். அரசன் தன் கீழ்க் குடிகளிடம் கொள்ளவேண்டிய நல்ல தொடர்பினையும். முடியாட்சியாயினும், அது குடியாட்சி வகையிலேயே அமைந்திருக்க வேண்டுமென்பதையும், அவ்வாறு மக்கள் தன் நாட்டு நலத்தைக் காக்கும் வகையில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்பதையும் கூறுகின்றார். உலகம் வாழ வழிகள் அத்தனைக்கும் மேல்வரிச் சட்டம் போன்று அவர்தம் குறட்பாக்கள் அமைகின்றன. பின், காமத்துப் பாலாகிய இன்பப் பாலிலே தொல்காப்பியர் கண்ட அத்துணை நுணுக்கங்களும் பேசப்படுகின்றன. தொல்காப்பியர் காலத்துக்குமுன் வள்ளு

க. வா.-21