பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறள்

331


நூலாக்கிக் கொண்டு செல்லும் வகையில் குறட்பாக்களை அமைத்துள்ளார். இவ்வாறு தொடக்கத்திலேயே மக்கள் சமுதாயம் யாதொரு வேறுபாடும் இன்றி வாழவேண்டும் என்பதை விளக்கிக் காட்டியவர் வேறு யாவர்? வள்ளுவருக்குத் தனி மனிதன் வாழ்வைக் காட்டிலும் சமுதாய வாழ்வே சிறக்க வேண்டும் என்ற கொள்கை உண்டு. எந்நாட்டில் பிறந்த நல்லவரும் இந்தத் துணிவில்தானே இருப்பர்! அப்போது தானே உலகம் உயர்வுற்று ஒங்கும்! சமுதாயம் தழைக்காமல், தனி மனிதன் மட்டும் ஓங்குவானானால், அதனல் என்ன பயன்? இந்த உண்மையை வள்ளுவர் நூல் முழுதும் காட்டிக் கொண்டே செல்கின்றார். நாம் மேலே கண்டபடி அவர் காட்டிய வாழ்க்கை சமுதாயத்துடன் நின்றுவிடவில்லை. அதையும் கடக்கிறது. உலகில் உயிர்பெற்றவை யாவற்றையும் வாழ வைக்கவேண்டும் என்பதே அறிஞர் தம் குறிக் கோளன்றோ!

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்,’ என்ற அடிப் படையிலே வள்ளுவர் வாழ்வு தொடங்குகின்றது. நாம் மேலே கண்டபடி எல்லா உயிர்க்கும் இன்பம் இயைவதுதானே! எந்த வகையிலும் வாழ்வு எல்லாவற்றிற்கும் ஒன்றே. வாழும் வகைகளும் வழித்துறைகளும் பலவேறு வகைகளில் வேறுபட்டிருக்கலாம். எனினும், யாவும் வாழ்கின்றவைதாம். அவற்றின் வாழ்க்கையையெல்லாம் காணவேண்டியே, எல்லா உயிர்க்கும் பிறப்பொக்கும் என்றார். இத்துணை விரிந்த மனப்பான்மையில் அவர் உள்ளம் வாழ்வை அளந்து அறுதியிட்டமையினாலே தான். அவர் நூலும் மற்றெல்லாவற்றைக் காட்டிலும் விரிந்த அளவில் பலராலும் போற்றப்பட்டு வருகின்றது.

எந்தப் பொருளை எடுத்து விளக்கினாலும், வள்ளுவருக்கு உயிர்களின் பொது வாழ்க்கைதான் முன்னிற்கும். அதனால், அவர் பல சொற்களுக்குப் புத்தம் புதிய உரை காண்கின்றாரோ எனும்படி பல குறள்கள் அமைகின்றன. பல சொற்களுக்கு உண்மையில் வாழ்வில் கொண்ட—கொள்ள வேண்டிய—பொருள்கள் இவைதாம் என்று திட்டமாகக் காட்டுவார்