பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

338

கவிதையும் வாழ்க்கையும்



‘தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிக் தார்.’ (குறள்,309)

எனவே, நல்லதொரு கல்வி, தன்னைப்போல உலகை ஒத்து நோக்கப் பயன்படத் தக்கதேயன்றி, உத்தியோகத்திற்காகவும், வேறு பட்டம் பதவிக்காகவும் அன்று என்பது வள்ளுவர் உன்ளக் கிடக்கை. அக்கல்வியை எல்லாவற்றாலும் கற்று உணர்ந்து, அதன்படி நடந்து, தாமும் வாழ்ந்து உலகையும் வாழ்விக்க வேண்டுமென்பதே குறட் கவிதையின் கருத்தாகும்.

இனி, அடுத்து வள்ளுவர் ‘நாகரிகம்’ என்ற சொல்லுக்குக் கண்ணோட்டம் என்றே பொருள் கொள்கின்றார். உலகில் கண் பெற்ற பயன் கண்ணோட்டத்தைப் பெறுதலே என்பது வள்ளுவர் கருத்து. பயின்றாரையும் பிறரையும் மறுக்காது ஏற்றுக்கொண்டு, தண்ணளி செய்தலே கண்ணோட்டமாகும். எனவே, நாகரிகம், கருணையென்னும் பண்பின் அடிப்படையில் பிறக்கின்றது: கருணை மட்டுமன்றி, பழகினவரிடத்து ஐயங் கொள்ளாமை முதலிய நல்ல பண்புகளையும் தன்னிடத்துக் கொண்டுள்ளது. பழகி உற்றாராகிவிட்ட பிறகு சிலர் மற்றவர் மேல் ஐயங்கொண்டவராகி, அவர்களை என்றும் நம்பாது இருக்கும் இன்றைய ‘நாகரிகத்தை’யும் காண்கின்றோம். ஆனால், வள்ளுவர் கண்ட நாகரிகம் அத்தகைய தன்று.

‘பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.’ (குறள். 580)

என்கின்றார் அவர். உற்ற நண்பன் என்று ஒருவனைத் தேர்ந்தெடுத்த பின்பு, அவனிடம் முழு நம்பிக்கை வைப்பதுதான் நாகரிகம். ஒருவரை ஒருவர் நம்பவில்லையானல், உலக வாழ்வே நடைபெருதன்றோ! ஆகவே நம்பிக்கை வைத்தவன். ஒருவரிடம் ஐயம் கொள்ளுதல் தவறு என்பதை விளக்கவும், அவ்வாறு கலந்து பழகியவர் பொருட்டுக் கருணை நலம் காட்டுதல் இன்றியமையாதது என்பதை விளக்கவும், அனைத்திலும் மேலாக, அவர் தமக்கு மாறு செய்யினும், தாம் அவர்