பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறள்

345


என்று இரு வகையில் வற்புறுத்திக் கூறுகின்றார். உலகத்தில் கூறப்படுகின்ற செல்வங்கள் அத்தனையினும் உலகத்தை ஒன்றாக்கவல்ல அறிஞர்தம் வாய்மொழியைக் கேட்பதாகிய கேள்விச் செல்வத்தினும் சிறந்த செல்வம் எங்ங்ணம் அமையும்?

இனி, வள்ளுவர் காட்டும் காதல் வாழ்வு இன்பம் தருவது; எண்ண எண்ணப் புத்தம் புதிய கருத்துக்களையும், அவற்றில் உள்ள இன்பத்தையும், ஊற்றுப் பெருக்கெடுத்து ஓடிவரச் செய்வது. உள்ளக் களித்தல் காமத்துக்கு இயல்பு என்பதை அவரே,

'உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்குஇல்: காமத்துக்கு உண்டு’ (குறள், 1281)

என்று கூறுகின்றார். இவ்வாறு நினைத்து நினைத்து மகிழும் காதல் வாழ்வை, வள்ளுவர், நுனித்தறிந்து உலகுக்கு வழங்குகின்றார். இரண்டொன்று கண்டு மேலே செல்வோம்.

காமத்தின் தன்மையை அவர் குறிப்பிடும்போது, ‘மலரினும் மெல்லிது காமம்’ என்று காட்டுவார். அந்த மென்மைத் தன்மைத்தாய காமம் கைகூடல் எல்லார்க்கும் எளிதன்று என்பதனை அதே குறளில் தொடர்ந்து, ‘சிலர் அதன் செவ்வி தலைப்படுவார்,' என்றும் காட்டுகின்றார். அத்தகைய மென்மைத் தன்மை வாய்ந்த காமத்தைப் பலப்பல வகையில், இருபத்தைந்து அதிகாரங்களில் விளக்குகின்றார்.

இக் காதல் நோய் தோன்றி, வளர்ந்து சிறப்பதையும், அதன் ஏற்றத்தையும்,

‘காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்’ (குறள், 1227)

என்று காட்டுகின்றார், மாலை நோய் காதலருக்கு இயல்பு தானே? அதை இவர் பொழுது கண்டு இரங்குதலில் பல்படப் பாரித்து உரைத்தல் அறிந்து இன்புறத்தக்கது.

‘காதல் என்பது, கொடுப்பாரும் அடுப்பாரும் இன்றிக் கூடும் கூட்டம்,' என்று மேலே அகம் பற்றி அறியும்போது

க. வா—22