பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காப்பியங்கள்

349


என்பது தமிழ் நாட்டில் வாழும் அத்தனை பேருக்கும்—படித்தவர் படியாதவர், உயர்ந்தோர் தாழ்ந்தோர் எல்லாருக்கும் — நன்கு தெரிந்த ஒன்று. அது பிற மொழிகளிலும் கதையாய் வழங்குகின்றது. அதே காலத்தில் அதை ஒட்டியே, ‘மணிமேகலை மேல் உரைப்பொருள் முற்றிய சிலப்பதிகாரம்' என்றபடி தோன்றிய மணிமேகலை, தமிழ் இலக்கிய உலகிலும் சரி, பொது மக்கள் வாழ்விலும் சரி, அவ்வளவு சிறக்க இடம் பெறவில்லை என்பதை நாம் கூறவேண்டா. தமிழ்நாட்டு வரலாறே அதை எடுத்துக் காட்டுகின்றதே! அதைப்போன்றே மற்ருெரு பேரிலக்கியமாகிய சீவகசிந்தாமணியும் அத்துணை விளக்கமாக நாட்டில் கால்கொள்ளவில்லை என்பது தேற்றம். அதற்குக் காரணம் என்ன? ஒரே காலத்தில், ஒத்த கல்வியும் பிற பண்பாடுகளும் பொருந்திய இரு பெரும் புலவர்களால் பாடப் பெற்ற, சிறந்த பாட்டுடைத் தலைவரைப் பெற்றன இரண்டும். முன்னது தாயையும், பின்னது சேயையும் தழுவியுள்ளன எனப் போற்றுமாறு அமைந்த காப்பியத்துள் ஒன்று ஏற்றம் பெற்று, இந்த மொழியில் மட்டுமன்றிப் பிறமொழிகளிலும் சென்று மக்கள் உள்ளங்களை மகிழ்விப்பானேன்? அதே வேளையில் மற்றொன்று பின்னடைந்து, பிறந்த நாட்டிலேயே பலரும் அறியாத வகையில் மங்கிக் கிடப்பானேன்? சிலர் அது அரசர் குடும்பத்தில் பிறந்தவர் இயற்றியதல்லை அரசர் ஆணைவழிச் சிறந்திருக்கலாம் என்றும், மற்றது சாதாரணப் புலவர் பாடியது ஆனமையால், அத்துணைச் சிறப்புப் பெறவில்லை என்றும் கூறலாம். ஆனால், அக்கூற்றுச் சரியாகாது. அவர்களுக்குள் அன்று யாதொரு வேறுபாடும் இருந்ததாகத் தெரியவில்லை. அப்படியிருந்ததாகவே கொண்டாலும், அவ்வாறு ஆணை வழியும், அடக்குமுறை வழியும், பிற செல்வாக்குக்கள் வழியும் இலக்கியங்களை என்றென்றும் வாழவைக்க இயலாது. இன்றும் சிலர் எழுத்துக்கள் அவ்வாறு ஏற்றம் பெற்றிருப்பது போலத் தெரியினும், அவர்தம் பதவியோ, வாழ்வோ நீங்கியபின் . நூல்களும் வீழ்ச்சியடைவதைக் காண்கின்றோம். இந்த நிலையிலேதான் அன்றும் மக்கள் வாழ்ந்தார்கள். ஏன்? இன்றைய நிலையிலும் சிறந்து வாழ்ந்தார்கள் என்றுகூடச்