பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காப்பியங்கள்

357


வன் படையெடுக்க நினைக்குங்கால் அங்கிருந்த, மாடல மறையோன் காஞ்சியென்னும் நிலையாமையை உணர்த்தி, அவனை மறவழியிலிருந்து அறவழிக்குக் கொண்டுவருகின்றான்.

நூல் முழுவதும் பல்வேறு வாழ்க்கை முறைகள் விளங்குகின்றன. தமிழ்நாட்டு மூவேந்தரையும் பிணைத்துச் செல்லும் இக் காப்பியம், தமிழ்நாட்டுப் பண்டைய நாகரிகம், பண்பாடு அனைத்தையுமே ஒருமுகமாக விளக்குகிறது எனலாம். புகார் என்னும் காவிரிப்பூம்பட்டினத்தின் ஏற்றத்தையும், மதுரை மாநகரின் சிறப்பையும், வஞ்சி நாட்டு மலை வளத்தையும் அவ்வந்நிலத்தும் நகரங்களிலும் வாழும் மக்கள் நாகரிகம், பண்பாடு, பழக்க வழக்கங்கள் அனைத்தையும் இந்நூலில் காணலாம். எல்லாவற்றினும் மேலாக, தமிழ் மன்னர்தம் அறவாழ்வை இந்நூல் விளக்குகின்றது. நூலே எழுதிய இளங்கோவடிகள் மூன்று உண்மைகளை விளக்குவதற்காகத் தான் இந்த நூலை எழுதினதாகக் காட்டுகிறார்.

'அரசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற் றாவதும்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும் என்பதும்
சூழ்வினைச் சிலம்பு காரண மாக
சிலப்பதி காரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்.’

(பதிகம். 55-60)

என்றுதானே கூறி நூலைத் தொடங்குகின்றார்? எனவே, அறநெறி முதலாகக் கொள்ளவேண்டிய அரச வாழ்வை அவர் நமக்கு விளக்குகின்றார். பாண்டியன் நெடுஞ்செழியன் அறியாது தவறிழைத்தான்; கோவலனைக் கொலை செய்வித்தான்; ஆனால், பின்பு கண்ணகி உணர்த்தத் தான் தவறிழைத்ததை உணர்ந்தான்! உடனே அதுபற்றி ஆராய்ச்சி செய்யவில்லை; தான் செய்ததுதான் சரி என்றும் வாதாடவில்லை; தான் இழைத்த தவறு மற்ற மன்னர்தம் செவிப்படுமுன் அடிப்பாரும் வற்புறுத்துவாரும் ஆணை செய்வாரும் இன்றித் தானே அந்த அரசு கட்டிலில் வீழ்ந்து உயிர் துறந்தான்.