பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

370

கவிதையும் வாழ்க்கையும்


கவிதைகள் தமிழ் நிலைக்கும், நடைக்கும் ஏற்ற வகையில் அழகாய் அமைந்து செல்கின்றன. அவற்றைப் போன்றே மகமதிய சமயத்திலும் மிக அதிகமாக இல்லாவிடினும், ஒரளவு சமயப் பாடல்களும் சமய வரலாற்றுக் கவிதைகளும் இருக்கின்றன. இவை அனைத்தும் இன்று தமிழ்நாட்டின் கவிதை உலகில் இடம் பெற்றுத்தான் வாழ்கின்றன.

பிற இலக்கியங்களைப் போன்று சமயக் கவிதை அதிகமாகச் சிறந்தோங்கவில்லை என்பது உண்மைதான். எனினும் ஒரு சில, காலத்தை வென்று, இன்றும் வாழ்கின்றன. சமயக் காழ்ப்பை வளர்த்து, பிற சமயங்களைக் குறை கூறி, மக்களின் அமைதி வாழ்வை வளர்ப்பதற்குப் பதிலாக, ஆரவாரக் கொடுமை வாழ்வை வளர்க்கும் இலக்கியங்கள் சமயச் சார்புடையவை எனினும், அவை நிச்சயம் அழிந்தொழிதல் தானே முறை? அந்த வகையில் எல்லாச் சமயங்களிலும் இடைக்காலத்தில் தோன்றிய எத்தனையோ பாடல்கள், இன்று மாய்ந்தொழிந்தன. அன்பை வளர்க்கவேண்டிய சமயங்கள், ஆரவாரத்தை வளர்க்க முற்படின், அவை எப்படி வாழும்? ஒரு சில இலக்கியங்கள் அவ்வச் சமயத்தாரால் மட்டும் ஒரளவு போற்றி வளர்க்கப்படுகின்றன. அச்சமயங்களிலும் எல்லோரும் எல்லா இலக்கியங்களையும் பயில்கின்றனர் என்று சொல்ல முடியாது. மிகச் சில சமய இலக்கியங்களே பிற சமயத்தவரும் பாராட்டக்கூடிய அளவில் அமைகின்றன. அவையும் தத்தம் சமயநெறிகளை மற்றவர்வழி வற்புறுத்தும் இடங்களில் வளர்ச்சியில் குறைவுற்றே செல்கின்றன. சமயத்தை வளர்த்தாலும், அன்றிப் பிற சமயங்களில் உள்ள குறைகளைக் காட்டினாலும், ஒருசில சமய இலக்கியங்கள் காலத்தால் அழியாது வாழ்வதற்கு ஒரே காரணம், அவையும் மக்கள் வாழ்வுக்கு வேண்டிய சிற்சில உண்மைகளை உணர்த்துவது தான்.

சமயமே தன்னலமற்ற வாழ்வில் தோன்றிய ஒன்று. வாழ்வைத் தனக்கென ஆக்கிக்கொள்ளாது, உலகில் உள்ள அனைவரையும் –அனைத்துயிரையும்–ஒன்றாக அணைத்துச்