பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதையும் கவிஞனும்

37



உயிர்ப்பொருள் மட்டுமன்றி, மனிதன் கைவண்ணத் திறனல் ஆக்கும் குழலும் யாழும் தண்ணுமையும் பிற பண் இயங்களும் நம் வாழ்வையே மறக்க வைக்கின்றனவே! அவை நமக்கு ஒருமை உணர்வை நல்கவில்லை என்று சொல்லமுடியுமா? அதில் கவிதை உணர்ச்சியும் கலை நலனும் காணவில்லை என்றால், உலகம் சிரியாதா! அவற்றை இயக்கும் கலைஞர்களை உலகம் பாராட்டுகிறதே! எனவே, கவிதைக்கலை மொழி வரம்புக்கு அப்பாற்பட்ட ஒன்றாகும் என்பது விளங்குகிறது.

இவ்வாறு மொழிக்கு முன்னமே கவிதை தோன்றியிருப்பினும், மொழியினலேயே கவிதை சிறப்படைந்தது எனலாம். மொழி அதற்கு மூலகாரணமன்று என்றாலும், மொழி அதைச் சிறப்பிக்கத் துணையாய் அமைகின்றது. உடலுக்கு உயிர் இன்றியமையாததுதான். அந்த உடலொடு கூடிய உடம்புக்குப் பிற ஆடை அணிகள் மேன்மேலும் அழகு செய்வன அல்லவோ? அவ்வாடை அணிகள் உயிரற்ற உடலுக்கு இடின், அதைக் கண்டு வியப்பார் யார்? ஒருவருமிலர். அவ்வகையிலேதான் கவிதைப் பண்பும் அமைகின்றது. கவிதைக்குப் பொருள் உயிர்நாடி அமைந்தாழ்ந்த நல்ல பொருள் இன்றேல், கவிதை இல்லைதான். எனினும், அக்கவிதை யாவர் மட்டும் சென்று சிறக்க வேண்டுமாயின், அதற்குச் சொற்கள் அழகு படுத்தத்தான் வேண்டும். எனவே, கவிதைக்கு அடிப்படை சொற்கள் அல்ல என்றாலும், கவிதையை உலகில் வாழவைக்கும் வகையில் அணிசெய்து சிறப்பிக்கும் பெருமை சொற்களுக்கே உண்டு.

பொருள்கள் எப்படிக் கவிஞர் வாய்மொழியில் விளக்க முற்றுப் போற்றப்படுகின்றன என்பதை மேலே கண்டோம். அதைப்போன்றே சொற்களும் புலவர் நாவில் பொருந்திக் கவிதையை மேலும் மேலும் அழகுபடுத்தும் என்பதையும் காணல் வேண்டும். கவிஞன் உள்ளம் எப்படிக் கருத்தால் நிறைந்து, ஒன்றன்பின் ஒன்றாக உருப்பெற்று ஊற்றெடுத்து. ஒடி வருமோ, அப்படியே சொற்களும் அவன் நாவில் உருண்டோடும். சொல்லுக்குப் பின் சொல்ல வேண்டுவது