பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமய இலக்கியங்கள்

373


என்ற வேண்டுகோளாக விடுக்கின்றார். இவ்வாறு உலகில் வாழும் உயிரினம் அனைத்தும் இன்பத்தில் திளைப்பதே சமயம். அதுதான் சமய வாழ்வு. அந்தச் சமய வாழ்வுக்குப் பல வழிகளைச் சமயம் வளர்த்த அறிஞர்கள் காட்டுகின்றார்கள்.

‘வைத்த பொருள் நமக்கு ஆம்என்று சொல்லி
மனத் தடைத்துச்
சித்தம் ஒருக்கிச் சிவய நமவென் றிரு.’

என்ற கூற்று, உலகில் பொருளாதார ஏற்றத் தாழ்வைப் போக்குவதன்றோ! பொருள் ஆசை கொண்டு, பெற்றது போதும், என்று அமைதியுறாது, மேலும் மேலும் உழன்று பொருள் பெருக்கும் தனி மனிதனல் அந்நாட்டுச் சமூகம் சீர் கெட்டுக் குலைகின்றது. பெற்ற எல்லையும் செல்வமும் போதா என்று வெறி கொண்டு பிற நாடுகளையும் வென்று, தம் ஆதிக்கத்துக்குக் கொண்டு வர வேண்டும் என்ற உணர்வால், உலக அமைதியே கெட, அவ்வாறு உண்டான அமைதியின்மையால் விளையும் போர் வழியில் நாடுகள் ஒரு சேர நாசமுறுகின்றன. அந்த நாசத்தையெல்லாம் தடுத்து, உலக உயிர்கள் அமைதிபெறக் காட்டிய மேலே கண்ட, மன நிறைவுற்ற வழியில் வாழ்வதுதான் சமய வாழ்க்கை.

இன்னு சமயக் கவிதைகள் மக்கள் வாழ வேண்டிய வீர வாழ்வையும் வற்புறுத்துகின்றன. அஞ்சாத பொருளுக்கெல்லாம் அஞ்சி அஞ்சிச் சாகும் மனித இனத்தின் இடையில் வாழும் நமக்கு வீரம் ஒரளவு மறைந்த பொருளாகிவிட்டாலும், தமிழ்க் கவிதை உலகில் அன்றுதொட்டு இன்றுவரை அது வாழ்ந்தேதான் வருகின்றது. சங்க காலத்தில் அரசர்க்கும் அஞ்சாது, அறம் உரைத்த புலவர் வரிசையில் ஒரு சிலரை மேலே கண்டோம். அதைப் போன்றே சமயத் துறையிலும் யாருக்கும் அஞ்சாது தாம் ஒழுகிய மெய்ந்நெறியிலே செல்பவரையும் காணல் வேண்டும். நம் நாட்டில் மட்டுமன்றி, எந்நாட்டிலும் சமயம் வளர்த்த தலைவர்கள், தங்கள், நாட்டு மன்னருக்கோ மற்றவருக்கோ முடி வணங்கினார்கள் என்று கூற