பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

374

கவிதையும் வாழ்க்கையும்


முடியாது. இங்கே அப்பரும் மணிமொழியாரும் வாழ்ந்த வரலாறுகள் அந்த நெறியை நமக்கு விளக்குகின்றன.

தமிழ்நாட்டிலே சிறந்த ஆதிக்கம் செலுத்திய மன்னருள் ஒருவகை மகேந்திரப் பல்லவன் காஞ்சியில் ஏழாம் நூற்றாண்டில் ஆட்சி செய்தான். அவன் கீழே சமயத் தலைவராயிருந்தவர்தாம் அப்பர். ஆயினும், அவர் அவனை விட்டு நீங்கித் தாம் மெய்யாக கண்ட சமயநெறியில் வாழுங்காலத்து, நெறியல்லா நெறி செல்லத் தம்மை அரசன் அழைத்ததாகக் கருதிய காலத்து, அவர் அவனுக்கு அஞ்சவில்லை. அவன் அனுப்பிய ஆள்களிடம், ‘நாமார்க்கும் குடியல்லோம்! என்ற வீர வார்த்தைகளை வீசினார்.

'பாராண்டு பகடுஏறி வருவார் சொல்லும்
பணிகேட்கக் கடவமோ பரிசற் றோமே.'

என்றும்,

'நாவலந்தீ வகத்தினுக்கு நாத ரான
காவலரே ஏவி விடுத்தா ரேனும்
கடவோ மல்லோம்.'

என்றும் அவர் யார்க்கும் அஞ்சாது வீறு பெற்றுப் பேசும் நிலை எண்ணத்தக்கது. மற்றோரிடத்தில் மதம் பிடித்த யானையைக் கண்டும் மதி மருண்டு ஓடாது, 'அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.' என்று வீரம் காட்டி நின்று, யானையை வென்முர் என்றும் காண்கின்றோம். பிற சமயத்திலும் இயேசுவும் பிறரும், அவ்வந் நாட்டு மன்னர்கள் தீங்கிழைக்க நினைத்த காலத்தில், அவர்களுக்குத் தலைதாழ்த்தாது நிமிர்ந்து அஞ்சா வாழ்விலேயே வாழ்ந்தார்கள் என்பதை அவர்தம் வரலாறுகள் விளக்குகின்றன. மற்றொரு சமயத் தலைவராகிய மாணிக்கவாசகரும் இந்தக் கொள்கையை வற்புறுத்துகின்றார். யாம் யார்க்கும் குடியல்லோம்! யாதும் அஞ்சோம்! என்று எதற்கும் அஞ்சாத வீர மொழி அவர்தம் வாயில் வருகின்றது. சைவ சமய வழியில் நின்ற நாயன்மாரைக் குறிக்கும்போது சேக்கிழார்,