பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமய இலக்கியங்கள்

377


சிறந்தன. ஆனால், பிற்காலத்தில் சமயம் வேறு, வாழ்க்கை வேறு என்று எண்ணக்கூடிய அளவிற்குச் சமயப்பாடல்கள் தனிப் பாதையில் செல்லலாயின. அதனால், அவை வளர்ச்சி பெறவில்லை. தமிழர் வாழ்வில், அவர் வாழ்வு தொடங்கிய நாள் தொட்டுச் சமயம் இடம் பெற்றிருந்ததெனினும், அதை என்றும் ஒரு தன்மைத்தாக மக்கள் போற்றவில்லை என்பது தெளிவு. எப்படியும் முற்காலத்தில் சமயக்கவிதைகள் ஒரளவு மக்கள் வாழ்வொடு தொடர்பு கொண்டு எழுந்தமையினாலே தான் அவை பிற சமய வேறுபாட்டுக்கும் மாறு பாட்டுக்கும் இடையிலும் இன்றளவும் வாழ்கின்றன எனலாம். அத்தகைய சமயக் கவிதைகள் வாழ்வொடு பிணைந்தவை. அவை வாழும் என்ற அளவோடு இதை நிறுத்திக்கொள்ளலாம்.

இது வரை கூறியவற்றால், தமிழ் நாட்டில் வாழ்ந்த சமயங்கள் எவை எவை என்பதும், அவற்றின் கவிதைகள் பல மாயச் சில வாழக் காரணம் இது என்பதும், சமயம் வாழ்வோடு எவ்வாறு பின்னப் பெற்றுள்ளதென்பதும், அவ்வாறு பின்னிப் பிணைந்த கவிதைகளே இன்றும் வாழ்கின்றன என்பதும் அறிந்தோம்.

 

க.வா.—24