பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கம்பரும் சேக்கிழாரும்

383


அது பேசிற்றோ இல்லையோ, அதுபற்றி நாம் ஆராயவேண்டா. ஆனால், அந்தச் செயல்வழிக் கம்பர் காட்டவந்த உண்மையே நமக்குத் தேவை. தசரதன் உடன்பிறந்த ஒன்றேபோல அது வாழ்ந்ததையும், இராம இலக்குமணருக்கு வந்த துன்பத்தைத் தனக்கே வந்ததுபோல எண்ணி, அது இராவணனுடன் போரிட்டு மடிந்ததையும் நோக்கின், உயிரினத்தின் தன்மை ஒருவாறு விளங்காமற் போகாது. பறவைகளுக்கும் விலங்குகளுக்கும்-ஏன்? மரங்களுக்குங்கூட உணர்ச்சி உண்டு என்னும் உண்மையை அது விளக்குகின்றதன்றோ!

வானரங்கள் இராமாயணத்தில் முக்கியப் பங்கு பெறுகின்றன். மனித இனத்தின் முந்திய நிலைதான் வானரம். அந்தப் பேசா மனிதஇனத்தில் பிறந்த சுக்கிரீவன் பேசுகின்றான். அனுமன் பேசுகின்றான். அவன் பேச்சில் மயங்கி அவனைச் ‘சொல்லின் செல்லன்’ என்றே காட்டுகின்றார் கம்பர். எத்தனையோ வீரர்களையும், மனிதப் பண்பாளரையும் காட்டுகின்ற கம்பர், அவர்களையெல்லாம் சொற் செல்வர்களாக்கிக் கூறாது, குரங்காகிய அனுமனைச் சொல்லின் செல்வனாக்கியதன் கருத்தென்ன? குரங்குகளின் உயிர்த்தோற்ற வளர்ச்சியின் எல்லையே மனித வாழ்வு என்பதைத்தானே அது குறிக்கின்றது!

இவ்வாறு எவ்வுயிரும் வேறுபாடற்று உடன்பிறந்தாரைப் போன்று வாழவேண்டும் என்று காட்டிய கம்பர், இன்னும் எத்தனையோ உண்மைகளைத் தம் கவிதைகளில் உள்ளடக்கி மனித வாழ்வுக்கு ஏற்ற வகையில் அவைகளை வெளியிடுகின்றார். இந்த இருபதாம் நூற்றாண்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக் கெல்லாம் கம்பர் ஏது காட்டி விளக்குகின்றர். இந்நாகரிக நூற்றாண்டில், நம் நாட்டில் நடந்த கொடுமையைக் கண்டோம். நாடு இரண்டாகத் துண்டாடப்பட்ட காலத்து வங்காலத்திலும் பீகாரிலும் எத்தகைய கொடுமைகள் நடைபெற்றன! எத்தனை இலட்சம் இந்துக்களும் மகமதியர்களும் சமய வெறிக்கு இரையானர்கள்!. எத்தனை இளம்பெண்கள்