பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/384

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கம்பரும் சேக்கிழாரும்

387


கூடவே மடிவ தன்றிக்
கொடுக்கயாம் ஒட்டோம்." என்றார்

(இயற்பகை: 18)

என்று எடுத்துக் காட்டுகின்றார் சேக்கிழார். இந்த நிலையில் யாரும் அச்செய்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவு. இன்று நாட்டில் இதைக் கண்டிப்பவரைக் காட்டிலும், அன்று அவர் சுற்றத்தார் கண்டிப்பு மிகக் கொடியதாகத்தானே உள்ளது? இயற்பகையார் சமயவெறி கொண்டவர். அத்தகை யார் அன்று மட்டுமன்றி, இன்றும் வாழ்கின்றனர். சேக்கிழார் சுற்றத்தார்தம் மன நிலையையும் அவர்தம் செயலையும் கூறாது, இயற்பகையாரைப் புகழவதில் தலைநின் றிருப்பாராயின், அவர் பெரிய புராணம் வாழ்வோடு பொருந்தாத நூலாகி,'வழக்கற்று என்றோ அழிந்து போயிருக்கும். இவ்வாறே அவர் வரலாற்றில் வரும் ஒவ்வொன்றைப் பற்றியும் ஆராயின், உண்மை புலனாகும்.

பெரிய புராணம் சமயச் சார்பான காவியமான போதிலும், அதிலும் வாழ்வொடு பொருந்தியே கவிதைகள் பல இடம் பெற்றுள்ளமைதான் அந்நூல் ஆயிரம் ஆண்டுகளுக்கும் அதற்கு மேலும் வாழக் கூடிய வகையில் நிலைபெற்றுள்ளது. 'செயற்கரிய செய்வார் பெரியர்,' என்ற வள்ளுவர் வாய்மொழிக்கு ஏற்ப, சாதாரண மக்களால் செய்ய முடியாதவற்றைச் செய்தவர் செயலைத் தொகுத்துத் தாம் பாடுவதாக அவர் குறிக்கின்றார்: அவர்தம் செயலை 'வீரம்' என்றே குறிக்கின்றார். இந் நூலில் தனியடியவர் தொகை அடியவர் எனப் பலர் பேசப்படுகின்றனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் சிவனுக்கும் சிவனடியாருக்கும் தொண்டுசெய்து இறைவனை அடைந்தனர் என்பதுதான் கதை. இந்தச் சமயக் கதையைக் கூறும் காலத்துச் சேக்கிழார் சமணம் போன்ற பிற சமயங் களையும் ஓரளவு பழித்துரைக்கின்றார். அதனலே இந்நூலின் சிறப்பு ஒரளவு குறைந்தது எனலாம். 'தென்னடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறை' என்றும்,