பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/390

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற்கால இலக்கியங்கள்

393


பார்ப்பின், அவர் கூற்று அத்துணைப் பொருத்தமானதெனத் தோன்றவில்லை. எப்படியோ பலவகைப் பிரபந்தங்கள் நாட்டில் உருப் பெற்றுவிட்டன. கோவை, உலா, அந்தாதி, கலம்பகம், தூது, மாலை முதலிய இலக்கியங்கள் நாட்டில் பெருகி விட்டன. பின்பு அவற்றின் இலக்கணம் கூறவும் ஒரு நூல் உண்டாகிவிட்டது. ‘பாட்டியல்’ என்பதே அதற்குப் பெயர். பாட்டுக்களின் இயல்பினைக் கூறுவதானமையின், அது பாட் டியல் என்ற பெயரைப் பெற்றது.

ஒரு புலவன் தன்னைச் சோறிட்டு ஆதரித்த ஒருவனைப் பாடவேண்டுமாயின், அதற்காக ஒரு பிரபந்தமே பாடி விடுவான். ஆனல், அந்தப் பிரபந்தத்தில் உண்மையைக் காட்டிலும் கற்பனையே அதிக இடம் பெற்றிருக்கும். சங்க காலத்தில் வாழ்ந்த புலவர்கள் தங்கள் நிலையிற் றாழாமலும், தாழ்வுவரின் மானத்திற்கஞ்சி வாழாமலும், நாட்டில் சிறந்த பண்பாட்டை வாழ வைத்தார்கள். தாங்கள் எதிர்பார்த்த பொருளுக்குக் குறைவாகக் கொடுத்தாலும், அன்றித் தங்கள் பெருமை அறிந்து கொள்ளாது, நேரில் பாராது, தங்களை ஒரு யாசகன் எனக் கருதி, முகம் நோக்காது பொருள் கொடுத்தாலும், அதை ஏற்றுக்கொள்ளாது, துச்சமாகக் கருதி, ஒதுக்கிவிடுவார்கள். ஆனால், இந்தப் பிற்காலப் புலவர்களோ, ஒன்றும் கொடாவிட்டாலும், மற்றவர்களை இந்திரனே சந்திரனே என்று புகழ்ந்து வாய்நோகின்ற அந்த ஒன்றைத் தவிர, வேறு பயன் பெற்றிருக்க மாட்டார்கள். அக்காலப் புலவர்கள் அறிவற்றவனை அணுகமாட்டார்கள். பிற்காலத்தவரோ, அறிவற்றவனை அண்டி அண்டி வாயலுக்கப் பாடி, வருவாய் இல்லாது போவார்கள். ஒரு சிலர் தாம் பெற்ற வருத்தத்தைக் கூறுவது காணின், பாவம், அவர்கள் கண்ணிர் விட்டுக் கதறுவது புலனாகும்! ஒரு புலவர்,


‘வஞ்சகர்பால் நடந்தலைந்த காலிற் புண்ணும்
        வாசல்தொறும் முட்டுண்ட தலையில் புண்ணும்
செஞ்சொல்லை நினைந்துருகும் நெஞ்சில் புண்ணும்
        தீருமென்றே சங்கரன்பால் சேர்ந்தேன் அப்பா!’

க. வா.—25