பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/392

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதையும் வாழ்க்கையும்

395


பாடிக் கருத்தழிந்து, ஏதோ வாழ்வுக்கு வேண்டும் பொருளைச் சம்பாதிக்க நினைக்கும் அந்த இழிந்த நிலையிலேதான் பிற்காலப் புலவர்கள் வாழ்ந்தார்கள் எனலாம் அதனால், யாரைப் பற்றியோ, எவரெவரைப் பற்றியோ சிறு நூல்கள் இயற்றி, அவற்றைப் பிரபந்தங்கள் எனக் கொண்டாடி வெளியிட்டு விட்டார்கள். இவர்கள் பாவம் வாழத் தெரியாதவர்கள் என்றுதான் கூற வேண்டும். இப்படிப்பட்ட புலவர்கள் பாடிய எத்தனையோ வகையான பாடல்களெல்லாம் இவர்கள் இருக்கும் காலத்திலேயே மண்ணோடு மண்ணாய் மாண்டு மறைந்து விட்டன. அப்பப்ப! அத்தனையும் இருந்திருந்தால், நாடே இடங்கொள்ளாதே! இவர்கள் உயிர் வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவத்தை மறந்து, உணர்வின் வழி உருவாகும் கவிதையை இயற்றாமல், ஏதோ காசு பறிக்க எழுத்துக்களைப் பாட்டாக எப்படியோ பாடி வைத்த காரணந்தான் அவை வழக்கிழந்து நிற்க வழியாயிற்று எனலாம்.

இனி, மற்றொரு வகையில் இப்பிற்கால இலக்கியங்களைக் காணலாம். நாட்டுப் பற்று, சமயப் பற்று, மொழிப் பற்று, முதலிய பற்றுக்கள் மனிதனுக்கு ஓரளவுக்கு இருக்கவேண்டு வன தாம். ஆனால், அவை எல்லைமீறி வெறியாக மாறினல் அதை மனித சமுதாயம் எப்படி ஏற்றுக் கொள்ளும்? அந்த வெறி தன்னைத் தவிர மற்றவர்களை மறக்கச் செய்தது. மறக்கச் செய்ததோடு மட்டுமின்றிப் பழிக்கவும் செய்தது. இந்த நிலையில் பல காவியங்கள் எழுந்தன. தத்தம் ஊரிலுள்ள கடவுளர் பேரில் பல பதிகங்கள் பாடி, அக் கடவுளே எல்லாக் கடவுளருக்கும் மேல் என்ற வகையில் அவற்றை அமைத்தனர்.

அப்பாலுக்கப்பாலாய் இருக்கும் ஆண்டவனே மனிதன் போலாக்கி, அவனையும் காமம் முதலிய உலகப் பொருள்களில் கட்டுண்டவனாக்கி, எப்படி எப்படியோ பலப்பல பாடல்களைப் பாடியிருக்கின்றனர். கடவுளைக் குழந்தையாக்கி அக்குழந்தை யைப் பாராட்டும் பாடல்களுக்குப் 'பிள்ளைத்தமிழ்’ என்று பெயரிட்டனர். அந் நூலில் குழந்தை பிறந்த மூன்றாம் திங்கள்