பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

402

கவிதையும் வாழ்க்கையும்


அடிமை வாழ்விலிருந்த இந்தியா, இன்று விடுதலை பெற்றுள்ளது; எனவே, தன்னிடம் உள்ள, கலைகளை வளர்க்க வேண்டுமென்று விரும்புகின்றது; அதற்கான புதிய துறைகளை ஆய்கின்றது; ஒவ்வொரு மொழியிலும் இந்த நூற்றாண்டில் வந்த நூல்களின் பெயர் முதலியவற்றைத் திரட்டி ஆராய் கின்றது. எந்தெந்த மொழிகளில் எவ்வெவ்வகையான இலக்கியங்கள் வந்துள்ளன என்பதை ஆராய மத்திய அரசாங்கத்தார் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். இந்த நாட்டு அரசாங்கத்தார் மொழியில் சிறந்த கவிஞரென்பாரை ஆத்தானக் கவிஞராக்கிச் சிறப்புச் செய்த னர். நாட்டு மொழிக் கலைகளையும் பிறவற்றையும் வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் அரசாங்கமும் மக்களும் ஒருசேர உறுதி கொண்டு பாடுபடுகின்றனர் என்பது ஒருதலை.

உலக அரங்கத்திலும் இத்தகைய பணிகள் நடை பெற ஏற்பாடாகின்றது. ஒவ்வொரு நாட்டிலும் சிறந்த இலக்கியங் களாக உள்ளவற்றைக் கண்டெடுத்து, பல்வேறு மொழிகளில் மொழி பெயர்த்து, உலக அரங்கத்திலே அவற்றைப் பல நாடு களிலும் உலவச் செய்ய வேண்டும் என்பது அதன் நோக்கம். புத்தம் புதிய கலைகளையும் ஆக்க வேண்டுமெனவும் உலகம் விரும்புகின்றது. அதற்காக ஒரு தனிப்பகுதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலகில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று மக்கள் உள்ளத்தில் மொழிப்பற்றும், கலையுணர்வும் அரும்பியிருக்கின்றன. எத்தனையோ புது நூல்கள் வந்து கொண்டே யிருக்கின்றன. என்னவாயினும், நாம் மேலே கண்டபடி, மக்கள் வாழ்வொடு தொடர்பு கொண்டுள்ள இலக்கியங்கள் அத்தனையும் பெரிய அளவில் வாழ்ந்து வருகின்றன. மற்றவை.........?

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் நாட்டில் உணர்ச்சி மிக்க புலவர் சிலர் வாழ்ந்து வந்தனர். தமிழ் நாட்டில் பாரதியாரை இந்த நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர் என்று போற்றுவார்கள்,'பாட்டுக்கு ஒரு புலவன் பாரதியடா’ என்று