பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/404

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இக்கால இலக்கியங்கள்

407


இன்றும் நாட்டில் கவிஞர் சிலர் கவிதை புனைகின்றனர். பாரதிதாசன் என்பார் பாரதி அடி ஒற்றிச் சமூகநல சம்பந்த மான பல பாடல்களைப் பாடினர். அண்மையில் மறைந்த கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பாடல்களையும் மாணவரும் மற்றவரும் நன்கு அறிவர். அரசாங்கக் கவிஞரா யிருந்த நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை அவர்களின் பாடல் களும் நாடறிந்தனவே. இவர்களேயன்றி எத்தனையோ எழுத்தாளர்கள் புத்தம் புதிய கவிதைகளைப் புனைகின்றார்கள். நாள்தோறும் வெளிவரும் இதழ்களில் பலப்பல கவிதைகள் தீட்டப்படுகின்றன. கவிதைக் குவியல்கள் நூல்களாக வந்த படியே இருக்கின்றன. ஆனல், அத்தனை பாடல்களும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்று கொள்ள முடியுமா? ஏதோ காலப்போக்கிற்கு ஏற்ப, சமுதாய ஏற்றத் தாழ்வுகளைச் சித்திரித்துப் பாடும் பாடல்களில் ஒரு சிலவே போற்றப்படுகின்றன; மற்றவை, காண்போரால் படிக்கவும் படாது மாய்ந்தொழிகின்றன.

உலகம் சிறிதாகிவிட்டபடியால், பலப்பல கொள்கைகள் நாட்டில் நடமாடுகின்றன. ஒரு நாட்டில் தோன்றிய கொள்கை விரைவிலேயே உலக முழுவதும் பரவும் கொள்கையாக மாறி விடுகிறது. அதற்கேற்ற சுற்றுச்சார்புகள் இன்று நாட்டில்- உலகில்-அதிகமாய் உள்ளன. இந்த நிலையில் சாதாரண மக்கள் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் வகையில் பல வகைப் பாடல்கள் உண்டாகின்றன. ஏழை பணக்கார வேறுபாட்டைச் சித்திரிக்கும் பாடல்கள், நாட்டுக்கு நாடு காட்டும் ஏற்றத்தாழ்வை விளக்குவன என்று எத்தனையோ வகையில் பாடல்கள் வந்துகொண்டேயிருக்கினறன. எனினும், அத்தனையும் வாழ்வதில்லை. சங்ககாலப் புலவன் ஒருவன் ஏழை பணக்கார வேறுபாட்டைச் சித்திரிக்கும் பாடலிலும் இன்றைய பாடல் கடுமையாகவே அவ் வேறுபாட்டைக் காட்டு கின்றது. எனினும், இவை ஒரு சில ஆண்டுகள் கூட வாழாது மறைந்துவிடுகின்றன. அன்றைய பாடலில் அமைதியும் ஆக்கப் பணிக்கு வழி வகையும் காணப்படுகின்றமையின், அது