பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதையின் வகைகள்

61


நூல்களாக அமைக்கப்பெற்றுள்ளன. எனினும், அத்துணை வேறுபாடுகளுக்கு இடையிலே அவை தழுவிச்செல்லும் அகம், புறம் என்ற இருவகைப் பொருள்களாலே பிணையப்பெற்றுப் பெருநூல்களாக அமைக்கப் பெற்றன. எட்டுத்தொகையில் புறநானூறும், பதிற்றுப்பத்தும் புறப்பொருள் பற்றிப் பேசுவன. மற்றைய ஆறு நூல்களாகிய நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு என்பன அகம் பற்றிப் பாடுவன. இவ்வாறு பிரித்தபின் அந்த நூல்கள் வழிச்சென்று பார்ப்பின், ஒவ்வொன்றிற்கும் திணையும் துறையும் குறித்திருக்கும். இன்னுரை இன்னர் பாடினர் என்றும், அப்பாட்டு இன்ன திணையில் இன்ன துறையில் பொருளை விளக்கும் பாட்டு என்றும், ஒவ்வொரு பாடல் இறுதியிலும் காண்கிறோம். ஒரு நூலின் பாடலில் இசையும் குறிப்பிடப் பெற்றுள்ளது. மற்ருென்றில், அப் பாடலின் சிறந்த தொடரால் அதன் பெயரைக் குறிப்பிட்டுள்ளதைக் காண்கின்றோம். எனவே, ஒவ்வொரு பாட்டும், திணையும் துறையும் பெற்றவை. இத்திணையும் துறையும் நாம் மேலே கண்டவைதாம். ஆகவே, இத்திணையும் துறையுமே தமிழ் இலக்கியத்தை வகைப்படுத்தி நமக்கு அளிக்கின்றன. அவ்விலக்கியங்களையும் அ வற்றின் பொருள்களையும் இவ்விரண்டின் வழியே துய்த்து அனுபவிக்கின்றோம். ஆகவே, அவை இன்றேல், இலக்கிய இன்பமெங்கே? அவ்விலக்கியங்கள் நம்மை வாழ்விக்கும் வளமார்ந்த வாழ்க்கைக் கவிதைகள் தாமே!

யாபபிலக்கணம் பற்றி அமையும்’ கவிதைப் பிரிவுகளைக் கண்ட நாம், அணி இலக்கணம் பற்றி அவை பிரிக்கப்படுதலையும் ஒர் அளவு காணல் வேண்டும். அணி இலக்கணம் கவிதையைச் சிறப்பிக்கப் பயன்படும் ஒன்றாகும். கவிதையோடு கலந்து யாப்பிலக்கணம் போல வருவதன்றிக் கவிதையை வளம்படுத்தப் பயன்படுவதே அணியாகும். அணி என்ற சொல்லுக்கே அழகு என்ற பொருள் உள்ளதை அறிவோம்! அவ்வணியிலக்கணம் காலத்தால் பல்கிப் பலவாக விரிவடைந்த