பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

கவிதையும் வாழ்க்கையும்


வும் பெயர் பெறுவான். ஏனெனில், அவன் வரம் பெற்றவன் போல, எந்தப் பொருளைப்பற்றி, எந்தக் காலத்தில் பாடச் சொன்னாலும், எந்த வகைப் பாட்டானாலும், தங்கு தடையின்றி, எடுத்துத் தொடுத்து முடிக்கும் ஆற்றல் பெற்றவன் ஆவன். அவன் தங்கு தடையின்றிப் ‘பாடுவதைக் கேட்போர் அதிசயித்து, இவன் கவி பாடவே வரம் பெற்று வந்தானே’ என்று எண்ணுவர். அவ்வாறு தமிழ் நாட்டில் புலவர் பலர் வாழ்ந்துள்ளனர். அவர்களுள் சிறப்பாகக் கவி காளமேகத்தை ஆசு கவி என்று தமிழ் நாட்டினர் புகழ்ந்துள்ளனர். 'ஆசு கவியால் அகில உலகமெல்லாம் வீசு புகழ்க் காளமேகமே!’ என்று, அவரை ஒரு புலவர் புகழ்ந்ததாகப் பாடல் உண்டு. அவர் அப்படித்தான் இம்மென்னு முன்னே இருநூறும் முந்நூறும், அம்மென்றால் ஆயிரம் பாட்டும் பாடும் இயல்புடையவர் என்று தம்மைத்தானே கூறிக் கொள்ளுகின்றார். அவர் தம் ஆசு கவித் திறனுக்கு எத்தனையோ பாட்டுக்களை எடுத்துக் காட்டுவார்கள். அப் பாடல்கள் சுவையும் சிலேடையும் நிறைந்துள்ளனவாக இருக்கும். ஒன்று கண்டு மேலே செல்லலாம்.

ஒருகால் காளமேகம் திருவண்ணுமலைக்குச் சென்றாராம். அங்கு வாழ்ந்த சம்பந்தாண்டார் என்பார் சற்றுத் தற்பெருமை கொண்டவர் போலும்! காளமேகத்தின் ஆசுகவித் திறனைக் கேட்டு, தம்மைப்பற்றியும் ஒருபாடல் பாடச் செய்யவேண்டும் என்று அவர் நினைத்தார். அவர் தெருவழியே காளமேகப் புலவர் சென்றாராம். அப்போது அச் சம்பந்தாண்டாருக்கு அம்பட்டர் , செளளம் . செய்து கொண்டிருந்தாராம். சம்பந்தாண்டார் காளமேகத்தைக் கண்டதும், அவரை அழைத்துத் தாம் செளளம் செய்து கொள்வதைப்பற்றிப் பாடச் சொன்னராம். ‘மன்’ என்று தொடங்கி ‘மலுக்கு’ என்று அந்த வெண்பா முடிய வேண்டும் என்பது நிபந்தனை. காளமேகப் புலவர் அதைச் சட்டை செய்யாது சென்று இருக்கலாம். அவ்வாறு சென்றால், அது அவர் பாட முடியாத தன்மையைக் காட்டுகிறது என யாரும் எண்ணிக்கொள்ள மாட்டார். எனினும், கர்வம்,பிடித்த சம்பந்தாண்டாருக்குப்