பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் வெற்றி

81


அப்பழிகளில் ஒன்று—மிகுந்தது—புலவர் பாடாத பழி. அவன் காலத்தே சிறக்க விளக்கிய புலவர் மாங்குடி மருதனார். “அவரைத் தலைவராக உள்ளிட்ட எல்லாப் புலவர்களும் என்னைப் பாடாத பழிக்கு நான் ஆளாவேன்” என்கின்றான்.


“சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமம் சிதையத் தாக்கி முரசமொடு
ஒருங்ககப் படேஎ னாயின்.........
.............................................
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவனாக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைகஎன் நிலவரை”(புறம். 72)

என்பன அவன் கூறிய சொற்களே. இப் புறநானூற்றுப் பாடல் அவன் புலவர் மாட்டுக் கொண்டிருந்த அன்பையும் சிறப்பையும் விளக்கும் அருங் கருவியாகவன்றோ அமைகின்றது! உலகம் உள்ளளவும் அவர்தம் வாய்மொழியால் உற்று வரும் புகழ் நிலைக்கும் என்றல்லவா அவனே கூறுகின்றான்! ஆம்; அத்தகைய மன்னர் மன்னரெல்லாம் தம் வாய்மொழிக்கு ஏங்கும்படி பாட் டிசைக்கும்—கவிதை பாடும்—புலவர்களை வாழ்வில் தோற்றவர் என்று யாராவது கூறின், அது எவ்வளவு பொருந்தாத ஒன்று என்று சொல்லவேண்டும்?

கவிதைகள் மட்டுமன்றிக் கலைகள் அனைத்துமே மன்னவரை என்றென்றும் வாழ வைப்பனவாம். மாமல்லபுரத்தை, அறியாத தமிழர் இருக்கமாட்டார்கள். தமிழர் மட்டுமென்ன! இந்திய நாட்டிலேயும் பலர் அதைக் காண ஓடி வருகின்றனர். உலக யாத்திரிகர்களில் சென்னைக்கு வருவோர் எல்லோரும் அந்த மாமல்லபுரச் சிற்பங்களைப் பாராது செல்ல மாட்டார் என்பது கண்கூடு. ஆம். அத்தகைய அழகிய சிற்பங்களைச் செதுக்கியவர் யாரோ! அவர் கைக்கொண்ட கல்லுளியும் பிற பொருள்களும் எங்குள்ளனவோ! யாமறியோம்! ஆயினும், அக்கலைக் கோயில் உருவான காலத்தில் வாழ்ந்த அந்தப்