பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

1. கவிதை ஒரு கலை


திரவன் வானவீதியில் இடைநின்று ஒளிரும். அந்த இடைவேளை, கோடையல்லாவிட்டாலும் கொதிக்கும் வெயிலின் நிலை தெரிந்துதான் இருந்தது. அந்த வெயிலிலும் தெருவிலே கூட்டம் நிறைந்திருந்தது. கிராமத் திண்ணைகளில் பலர் உட்கார்ந்திருந்தனர். வீட்டோரங்களில் பலர் நின்றிருந்தனர். தெருப்புழுதியிலே, கழைக்கூத்தாடி தன் வேடிக்கைகளையெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாகக் காட்டிக் கொண்டிருந்தான். வளையா நெடு மூங்கிலின்மேல் நின்று, அவன். ஆடும் காட்சியை அனைவரும் கண்டனர். ஆட்டம் அழகுதான்; அனைவரும் கைதொட்டி ஆரவாரம், செய்தனர். அவன் கரணம்: போடுவதும், தாவி ஆடுவதும், தலை கீழாகத் தொங்குவதும் காண்போர் அனைவர்தம் கண்ணையும் கருத்தையும் பற்றி ஈர்த்தன. அவர்கள் உள்ளங்க்ளிலெல்லாம் இன்பவெள்ளம் ஊற்றெடுக்கச்செய்தான் அக் கூத்தாடி. இளங்குழந்தைகளும் பெரியவர்களும் தங்களை மறந்த நிலையில், அவன் ஆடல் கண்டு மகிழ்ந்தார்கள். அவர்களை அவ்வாறு - முழுக்க முழுக் மகிழவைக்கும் அந்தக் கழைக்கூத்தாடியின் நிலை என்ன?

பாவம்! கழைக்கூத்தாடி தன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டல்லவா, அந்த வேடிக்கைகளைக் காட்டிக் கொண்டிருந்தான்! வழுக்கி விழுந்தால் அவன் கதி என்ன என்பதை அவன் அறிவான். அத்தனைபேர் கைகொட்டி ஆரவாரிக்கும் அந்த நிலையில் அவன் உள்ளம் மகிழ்ச்சியிலா செல்லும்? எப்படி எப்படி வளைந்து நெளிந்து, வழுவாது ஆடவேண்டும். என்ற எண்ணத்திலே, அவன் உள்ளத்தில் மகிழ்ச்சி பிறக்க வழியேது? கொதிக்கும்.வெயிலினுல் உடலில் வழிந்தோடும் வியர்வையை