பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் வெற்றி

95


எண்ணியிருப்பார்; உடனே அவ்விருவரும் போர். தொடங்க இருக்கும் நிலையில் அவர்கள் இடையில் சென்று நின்றார்: நின்று. இருவரையும் அருகழைத்து, ஓர் உண்மையை அறிவுறுத்தினர்: போரில் இருவரும் வெற்றி அடைதல் என்பது இயலாது. ஒருவர் தோற்பினும் தோற்றது சோழர் குடி என்ற அவச்சொல்லே வந்து சேரும். அந்த அவச்சொல்லைப் பிறந்த குடிக்கு உண்டாக்குவது அவ்வளவு நல்லதன்று. என்று சொல்லிப் போரையே நிறுத்தி விட்டார், புலவர் கோவூர் கிழார்.


‘ஒருவீர் தோற்பினும் தோற்பதும் குடியே:
இருவீர் வேறல் இயற்கையு மன்றே; அதனல்,
குடிப்பொருள் அன்றுநும் செய்தி: கொடித்தேர்
நூம்மோ ரன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி உவகை செய்யும்இவ் விகலே.’ (புறம். 45)

என்ற பாட்டு அவருடைய பாட்டுத்தான். பின்பு போர் நீங்கிற்று. சோழ நாடும் அமைதியுற்றது. இப்படி ஒரு நாட்டு வரலாற்றிலேயே அமைதியைத் தேடித் தந்து, வாழ்வில் மேற் கொண்டதை முடித்து வெற்றி கண்ட கவிஞரும் வாழ்ந்துள்ளனர்.

மற்றொரு புலவராகிய ஒளவையார் தொடங்கும் போரை முளையிலேயே கிள்ளி எறிந்து, நாட்டில் அமைதியை நிலை நாட்டினர். அதிகமானும், தொண்டைமானும் தம்முள் மாறுபட்டுப் போர் தொடங்கத் திட்டமிட்டனர். அதிகமானக் காண வந்த ஒளவையார் அதைக் கேட்டறிந்தார். போரினல் உண்டாகும் விளைவுகளை அவர் மனம் , எண்ணிப் பார்த்தது. எத்தனை உயிர்கள் நாசமாகிக் கெடும்! எவ்வளவு பொருள்கள் சேதமாகும்! அனைத்தையும் எண்ணிப் பார்த்து, எப்படியும் போரை நிறுத்தித்தான் ஆகவேண்டும் என்று அவர் கவி உள்ளம் எண்ணியிருக்கும். அவ் வெண்ணத்தால் அவர் அதிக மானிடம் பேசினர்; போர் தொடங்குமுன் தாம் ஒரு முறை தொண்டைமானிடம் தூது செல்ல வேண்டும் என்று கூறினர். அவர் விழைவினை மறுக்காத அதிகன், அவரைத் தொண்டை