பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் வெற்றி

99


கொண்டாட்டமா? உலக நாகரிகத்தில் ஒருவகைப்பட்ட நாகரிகம் நலிவுற்றதென மற்றவை மகிழ்வதா?” இவ்வாறே அக்கவிஞன் அஞ்சாது அடுக்கிக்கொண்டே செல்கின்றான் கேள்விகளே. இத்தகைய வீர உள்ளத்தோடு வாழ்ந்த கவிஞர்கள். அன்றுமுதல் இன்றுவரையில் வெற்றிவீரராக வாழ்வதைக் கண்ணாரக் காண்கின்றோமே! இவற்றின் மூலம் கவிஞர் வாழ்வு—தனி வாழ்வாயினும் சரி, பொது வாழ்வாயினும் சரி—வெற்றி பெற்றது என்றுதானே கொள்ள வேண்டும்? அவர்தம் வெற்றி அவர் பாடிய கவியின் வெற்றியேயாகும். அவர்தம் கவிகள் வெற்றித்திருவென அமைவதற்கு அவை நலம்பல நிரம்பப் பெற்றனவாக இருக்கவேண்டும். அக்கவிகளின் நலத்தைத் தொடர்ந்து காணலாம்.

இதுகாறும் கூறியவற்றால், கவிஞர் வாழ்க்கை எப்படி அமைந்ததென்பதும், அவர் தனிவாழ்வில் செல்வமற்று வறுமையில் வாடியபோதிலும் அவ் வறுமையைப் போக்க நாட்டில் பல மன்னர்கள் முன் நின்றதால் அவற்றால் கவலையுருது வாழ்ந்தனர் என்பதும், அவ் வறுமையும் அவராகவே தேடிக் கொண்டதே தவிர இயற்கையாக அமைந்ததன்று என்பதும், ஆறுமையிலும், மாமன்னர் கொடுக்கும் பொருள்களை மற்ற வருக்கு வாரிக்கொடுத்து ஈத்துவக்கும் இன்பத்தில் தமது வாழ்வின் வெற்றியைக் கண்டனர் என்பதும், அவர்தம் வாழ்க்கையைக் குறியாகக் கொள்ளின் யார் எதைக் கொடுத் தாலும் ஏற்பர்; ஆனால், அவ்வாறு செய்யாது தம் கவிநலம் கண்டு போற்றுவாரையே புகழ்ந்ததால் அவர்தம் வாழ்வையே குறிக்கோளாகக் கொண்டவர் அல்லர் என்பதும், முடி சார்ந்த மன்னரும் மற்றவரும் அப் புலவர் வாய்மொழிக்கு ஏங்கித் தவித்தனர் என்பதும், தனிவாழ்வில் மட்டுமன்றிப் பொது வாழ்விலும் கவிஞர்கள் பங்கு கொண்டு, நாடும் உலகமும் வாழப் பாடுபட்டு அத்துைறயிலும் வெற்றிக் கண்டார்கள் என்பதும், போர் உண்டாகாமலும், போலி வெற்றியில் வெறி கொள்ளாமலும், மன்னரையும் மற்றவரையும் தடுத்துச் சிறந் தார்கள் என்பதும், எனவே, கவிஞர் என்றென்றும் வெற்றியிலேயே வாழ்ந்தவர்கள் என்பதும் நன்கு புலனாகும்,