பக்கம்:கவிதை உள்ளம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை யுள்ளம்


இயற்கையைக் கண்டு மகிழ்வாய்-நான்
ஏகி உடன்வந்து இங்கே இருப்பன்
மயக்கமில் குறிதவ றாமல்-கண்ணே
மன்னி இன்பம் அளி மாதவன் ஆணை

என்றவன் எகினன் இவளும்-தன
திளநல இன்பத்தின் இனிமையைக் கண்டு
நின்றனள் சந்திரன் தோன்றி-அவன்
நேர்மையைக் கண்டு நகைத்தனன் சென்றாள்

தெய்வீகக் காதல் சிறந்தார்-அவர்
தெய்வீகக் காதல் சிறந்தினி தோங்க
மெய்மையும் வீறும் பெறுக-உண்மை

மேவும் நலன்சிறங் தோங்குக மாதோ.[1]

—————

  1. * (1939ல் வெளியான கவிதை)

98

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/100&oldid=1387591" இலிருந்து மீள்விக்கப்பட்டது