பக்கம்:கவிதை உள்ளம்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடலும் காதலும்

எங்கும் பரந்துடை மெய்க்கடலே உன
தின்ப நிலை எதுவோ-மனம்
பொங்கிய எண்ணம் பலப்பலவாம் அதன்
போக்கை விளக் கிடவோ

காதலெனும் பெரு வெள்ளத்திலே அது
கவிழ்ந்து புரளு தையோ-எந்தன்
மாதவள் காதலி கண்டிட ஓடியே
மாழ்கித் திரும்பிடு மால்

நீயுமுன் வானமும் நேர்ந்து கலந்திடு
நேர்மையில் என் மனதும்-உயர்
காதல் தலைவியைக் கட்டி அணைத்திட
கருத்திடை எண்ண முறும்

ஓயாது தோன்றிடு மோங்கு மலையைப்போல்
ஒர்கோடி எண்ண மெல்லாம்-இவண்
சாயாது என்னிடம் தாண்டவம் செய்துமே
சஞ்சலம் மூட்டு தையோ

பொன்னு மணியுநீ புதைத்து வைத்தாற்போலப்
பொற்புடைக் காதலியும்- அவள்
உன்னருங் காதலை உள்ளத்தி லேகொண்டு
ஒளித்தெனை வாட்டு கின்றாள்

சந்திரன் கண்டு தலைதுாக்கி நிற்கின்றாய்
தன்மை மிகு கடலே-அவள்
சிந்தையில் என்உரு கண்டதும் இன்பத்தின்

சீர்தலை தூக்கிடு வாள்

99

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/101&oldid=1387743" இலிருந்து மீள்விக்கப்பட்டது