பக்கம்:கவிதை உள்ளம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை யுள்ளம்



உன்னிடை மீன்கள் உருளும் செயலது
உயர்ந்திடு காதலி தன்-நல்ல
இன்னிய விழிபிறழ் வேடிக்கை தன்னையே
இதயத்தில் தோற்று விக்கும்

கருமை நிறங்கொண்ட கார்க்கடலே அவள்
கடிமணக் கூந்த லுமே-என்றன்
அருமை மனதினில் அந்த நிறத்துடை
அழகினைத் தோற்று விக்கும்

கடலே உனதொலி காதடைக் கின்றது
காதலி தன் னுரையோ-என்றன்
உடலையும் உயிரையும் உள்ள அனைத்தையும்
ஒன்றாய் அடைப் பதுவே!

நேரம் கழிந்தது நேரிழையும் வந்து
நின்றெனத் தேடிடு வாள்-நான்
ஆர மணிவித்து அணைத்தின்பங் கண்டபின்
அடுத்தநாள் வந்திடு வேன்

சென்று வருகின்றேன் சீர்க்கடலே அவண்
செல்வி எனை அழைப்பாள்- நீ
என்று மிவண்நின்று இன்ப மளித்திட்டு

ஏற்ற முற வாழி!

———————

100

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/102&oldid=1387750" இலிருந்து மீள்விக்கப்பட்டது