பக்கம்:கவிதை உள்ளம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிள்ளை விடு தூது


சென்று சொல்லிடுவாய்-கிளியே-சென்று
சொல்லிடுவாய்

ஒன்றிய மனமுடன் உத்தமன் உறவெண்ணி
உழன்று வருந்தியே ஒலமிட்டே னென்று (சென்று)
இளமைப் பொழுதினிலே-வந்து
எந்தன் அருகிலே இயைபுட னேநின்று
வளமை வழங்கி நின்றான்-அவன்
வந்து அருளுவன் என்றே அகன்றிட்டான் (சென்று)

அந்த நாள் முதலாக-நான்
அவன் வருவானென்று தவநிலை கொண்டுமே
சிந்தை மகிழ்க் திருந்தேன்-இன்னும்
சேரவந் தின்னருள் ஈந்திலனை நீயும் (சென்று)


என் பின்னர் சூழ்ந்திடுவார்-பலர்
ஏதேதோ சொல்லிப் பிதற்றுகின்றார் மனம்
கன்றி வருந்தி நின்றேன்-அவன்
கண்ணைத் திறந்துஎன் அண்மையில் வந்திட
(சென்று)

சுற்றியே நின்றிடுவார்-பல
துன்மார்க்கச் செயல்புரி வன்மார்க்க வழிபுகு
அற்பர்கள் பலரிருப்பர்-அவரிடம்
தப்ப வழியுன்றித் தயங்குகின்றே னென்று (சென்று)

101

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/103&oldid=1387761" இலிருந்து மீள்விக்கப்பட்டது