பக்கம்:கவிதை உள்ளம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை யுள்ளம்


வருவர் இன்பம் தருவார்-மற்று
வராது ஏனோ மறைந்து அங்கேநின்றார்
அருமை அற்றவராக-அந்தோ
அவர்புரி செயலெல்லாம் ஆற்றுகிலே னென்று
(சென்று)

உனைப் பிரிக்க எண்ணுவார்-தலைவா!
உற்றஎன்மேல் பல கற்பனைகள் செய்வார்
நினைத்திடில் அவை கொஞ்சமோ-உந்தன்
நெஞ்சிலே வைக்காது வந்திடுவாய் என்று (சென்று)

பாவம் பல புரிவார்-கொடும்
பாவிக ளெனநின்று ஆவி துடித்திட
ஆவன ஆக்கிடுவார்-அவர்
அதிகாரங் கெட்டு அகங்தை அழிந்திட (சென்று)

எங்தன் தலைவனவன்-அவன்
எல்லா விடத்திலும் எண்ணி நிரம்புவான்
கந்தனெனப் படுவான்-உயர்
கட்டழ கமைந்தவன் சட்டென்று வருதற்கே
(சென்று)

ஊரில்லே காணியில்லை-மற்று
உறவினர் ரென்பவர் ஒருவரு மிலையவர்
பேரினைச் சொல்லி இங்கே-என்றும்
பிதற்றியே நிற்பதைப் பேசி உடன்வர (சென்று)
வாழ்க்கையில் ஒன்றிடுவேன்-எங்தன்
வாழ்நாள் முழுவதும் தாழ்ந்திடுவே னவன்
வாழ்க்கை உயர்த்திடுவேன்-என்றன்
வாழ்க்கைக் குயர்வருள் பாலித் திடுவென்று (சென்று)

102

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/104&oldid=1387786" இலிருந்து மீள்விக்கப்பட்டது