பக்கம்:கவிதை உள்ளம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உருவெளித் தோற்றம்

செல்வா னிளம்பருதி தெற்றெனவே மேற்கிளம்பி
எவ்வாயினும் ஒளியை இன்னினிதாய் வீசிடவும்
காலைப் புள்ளினங்கள் கண்ணியநற் றீங்குரலில்
சாலப் பலபாடித் தாவிக் குதித்திடவும்
உற்றதொரு வேளையிலே உள்ளம் பறிகொடுத்து
மற்றப் பொருள்மறந்து மாமயலி லாழ்ந்து
விட்டேன்

உள்ளத்திற் காதல்கொண்டேன் உண்மைவழி
(தன்னில்வரும்

வெள்ளத்தனை அன்பை வேண்டி மனங்கரைந்தேன்
கண்டேன் இன்பநிலை கட்டுரைக்க மாட்டாதே
கொண்டேன் மாமயலும் கூசாமற் கூறுகின்றேன்
காமக் கண்ணியவள் காணரிய கட்டழகி
நாம இனியவள் நாடியெனை வந்திடவும்
பற்றி வளைக்கரங்கள் பக்கல் உடன் இருத்தி
உற்ற நலம்வினவி உள்ளம் ஒன்றுபடக்
கண்டோம் இருவருடல் கட்டிடவே இன்பநிலை
கொண்டோம் குளிர்கொன்றைச் சடையனெனவே
யானோம்
மாற்றி உயர்முத்தம் மகிழ்வாகப் பெற்றபின்பு
சாற்றரிய அன்பின் தனிக்கடலி லாழ்ந்துவிட்டோம்
பிரிந்த நிலைஅறியோம் பேசா மெளனநிலை

104

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/106&oldid=1387800" இலிருந்து மீள்விக்கப்பட்டது