பக்கம்:கவிதை உள்ளம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல்



புரிந்தோம் அதன்பிறகு 'போய்வருவேன்' என்றகன்றாள்
அந்நாள் முதலாக ஆசையதே பாசமதாய்
இந்நாள் தொறும்விழைந்தும் என்முன்பு காணவில்லை
பேதை மனத்துடன் பெண்ணவளும் எங்குசென்றாள்?
ஓதைச் சிலம்புடைய ஒண்டொடியாள் காணவில்லை
பாழும் மனம்வருந்திப் பதைத்துயான் தேடுகின்றேன்
நாடும் தமிழறிவீர் நாட்டினில்நீர் கண்டீரேல்
கூறிடுவீ ரப்போதே கொள்வேன் அவள்நலத்தை
மாறி இருந்தறியாள் மங்கையவள் கண்டவுடன்
கண்ணாலம் செய்வேன் கட்டாயம் கூறிடுவேன்

பண்ணாலே பாடிப் பல்லாண்டு வாழ்த்துவீரே!*
 

  • 1837ல் பாடியது.

105

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/107&oldid=1387873" இலிருந்து மீள்விக்கப்பட்டது