பக்கம்:கவிதை உள்ளம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிமுகம்

அ. மு.ப. வின் கவிதைகள்[1]


இர. ஆா. கணேச நம்பி, எம் ஏ.

“உள்ளத்தில் உண்மைஒளி உண்டாயின்
        வாக்கினிலே ஒளியுண் டாகும்
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
        கவிப்பெருக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
        விழிபெற்றுப் பதவி கொள்வார்
தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார்

        இங்கமரர் சிறப்புக் கண்டார்”

என்ற தெள்ளுதமிழ்ப் புலவர் பாரதியின் கவிதை, கவிதை எங்ஙனம் உருப்பெறுகிறது, உலகுக்கு என்ன பலன் நல்கு கிறது என்பவற்றைத் தெள்ளத் தெளிவாக விளங்கும் உள்ளம் கவர் கவிதையாகும்.

உள்ளத்தில் உண்மை ஒளி பெற்று, வாக்கினிலே ஒளி உண்டாகி வெள்ளத்தின் பெருக்கைப்போல் கவிப் பெருக்கு மேவிய காரணத்தால் ஆசிரியர் அ. மு. ப. அவர்கள் அழகு தமிழில் அரிய பல கவிதைகளைக் கற்பவர் மனம் களிநடமிடு வகையில் படைத்துக் கொடுத்துள்ளார்கள்.

கவிஞர் அ. மு. ப. புனைந்து வழங்கியுள்ள கவிதைகளைத் தமிழ், சமயம், காதல், இயற்கை, பொது என்ற தலைப்புக்-


  1. 10-3-74-ல் பச்சையப்பன் கல்லூரியின் கருத்தரங்கில் வாசிக்கப் பெற்றது.

9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/11&oldid=1387523" இலிருந்து மீள்விக்கப்பட்டது