பக்கம்:கவிதை உள்ளம்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வருவதும் போவதும்


அன்றொருநாள் மாலை ஆறுமணி இருக்கும்
தென்றல் இளங்காற்றுச் சில்லென்று வீசியதால்
மாலைப் பொழுது மனத்துக் கினியதுவால்
சாலப்பல நலத்தைச் சார்ந்துநின்ற நேரமது
எந்தன் தமிழ்த்தலைவி என்னுயிரின் வைப்பிடத்தாள்
சொந்தமனை தன்னில் தூதுபல சொல்லிடுவாள்
வேகத்தே செல்ல விரைவாய் நடக்கையிலே
மோகாந்த மாலை முழுமதியென் காதலியின்
பொற்பார் முகமே போற்கிழக்கே தோன்றியதால்
அற்புதங் கண்டு ஆழ்ந்தநிலை தனில்இருந்தேன்
எங்கிருந்தோ வந்தாள் எல்லாவெண் பற்களையும்
இங்கென்முன் காட்டி எழில்மிகுந்து நின்றவள்போல்
என்இடது பக்கம் எட்டி வடக்கிருந்து
கன்னிறைந்த காடு கடுகி நடந்தவள்போல்
தோன்றினாள் ஆனாலும் தூய்மைஅங்கே காணவில்லை
கான்றும் கொடுஞ்செயலைக் கண்ணிரண்டும் காட்டினவே
என்னருகே வந்தாள் எதடா சனியனென்று
பின்னுமென் வழிபார்த்துப் பெயர்ந்திட்ட வேளையிலே
வழிமறித்து என்முன் வார்த்தைபல சொல்லிநின்றாள்
நான்ஓர் வடஜாதி நாட்டிலெனைப் போன்றவரைக்
காணக் கொடுத்துவைப்பார் காசினியி லுண்டேயோ?
என்அழகு உன்கண்முன் ஏன்று தெரிவதைப்போல்
உன்முன்னர் இதுவரையும் ஒருவரையும் கண்டதில்லை

என்றே மொழிந்தாள ஏபேதாய யாரென்றேன்

108

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/110&oldid=1387858" இலிருந்து மீள்விக்கப்பட்டது