பக்கம்:கவிதை உள்ளம்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



காதல்



இங்குவந்து என்னை இன்னலிலே விட்டிடல்ஏன்?
என்ற ஒருமொழியை ஏற்று அவள் பேசுகின்றாள்
கண்டே கனிரசமே கற்பகமே சர்க்கரையே
கொண்டே எனதுமொழி குலவிடுவோம் வாரிரோ!
ஆசை அழகா ஆண்களிலே தோளழகா
நேசம் மிகுந்தாய் நிறைந்த பொறையுடையாய்
என் அழகைக் கண்டு இளகமன மில்லைகொலோ
உன்அருகே என்றும் உற்றகதை உரைப்பேன்
மொழிகள் பல பேசிடுவேன் மோகமாய்ப் பலநாட்டு
வழிக ளறிந்திடுவேன் வந்தால் உனே அழைத்து
எங்காடும் காட்ட ஏற்ற வழி அறிவேன்
கண்ணாளா என்பேர் கண்ணாட்டி தானாகும்
மோகனப் பார்வையிலே முத்தங்தனைச் செய்வேன்
ஏகுநீ என்னுடனே என்றுரைத்தாள் நானுடனே
வஞ்சகமே பேயே வனத்தின் கொடும்பாவி
சஞ்சலமேன் எங்கட்குத் தாவி ஓடிடுவாய்
என்றிசைத்து முடிவதற்குள் எந்தன்மேல் சாயவந்தாள்
அந்தோஎன் றப்புறத்தேன் அலறிநின்றேன் அவளுடனே
கோபம்ஏன் கொண்டீர் கொண்டால் எனைப்பலனும்
வேகமாய் மிக்கிடும்நீ்ர் வேண்டியதைச் செய்திடுவேன்
வீட்டிற்கு பொட்டிட்டுப் வேலைபல செய்து
வாட்டம் அகற்றி வளர்ப்பேன் பணிப்பெண்ணாய்
உன்கால் செருப்பாக உள்ளநா ளத்தனையும்
என்வாழ்வை ஆக்கி இருப்பேன்நான் இன்னுங்கேள்
தோசைக்குச் சட்டினியாம் தோகைக்கு நற்கண்ணாம்.
ஆசைக்கு நானும் அருகிருக்க வேண்டாவோ
நான்வாழும் நாடடில் நல்லவர்கள் உந்தனைப்போல்
ஏன் ஒருவர் இல்லை எனஏங்கி வாடுகின்றேன்

கண்ணாளா என்னைக் கலியாணம் செய்தக்கால்

109

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/111&oldid=1387680" இலிருந்து மீள்விக்கப்பட்டது