பக்கம்:கவிதை உள்ளம்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனவு நிலை உரைத்தல்

சொல்லரிய மாருதமும் தூய்மையுடைக் கந்தமுமே
சுகமாய் வீச
அல்வருமுன் மாலைதனில் ஆண்டொருசோ லையி னிடத்தே
அழகாய் நிற்க
நல்லமுத மொழியுடைய நாயகியும் எனையணுகி
நண்பா என்ன
வெல்லரிய இன்னலெலாம் ஒழித்திட்டேன் அக்கணத்தே
வினையும் தீர்ந்தேன்.
கற்கண்டு வெறுக்குமொழிக் கன்னிகையையும் பல விதமாம்
கனிகள் கொண்டு
நற்கந்த வாசமுடன் எனைநாடி நிற்கையிலே
நவில லாமோ
சொற்கொண்டு அளந்தாலும் முடியாது யாவருக்கும்
தூய்மை யுள்ள
விற்கொண்டு மன்மதனும் எய்திட்டாய் விடாய்மிக்கு
விரும்பி நிற்க!
கன்னிகையும் எனையணைத்து முத்தமிட்டாள் யான் தானும்
களிப்பு மிக்கு
என்னினிய ரத்தினமே என்றேத்தி இதழ்சுவைத்தேன்

இம்மட் டோதான்

113

8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/115&oldid=1387853" இலிருந்து மீள்விக்கப்பட்டது